திங்கள், டிசம்பர் 17, 2012
தமிழ்மகனுக்கு கோவை இலக்கியப் பரிசு
சுப்ரபாரதிணியன்
கோவை
கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின்
ரங்கம்மாள் விருது இவ்வாண்டு
தமிழ்மகனுக்கு அவரின் “
வெட்டுப்புலி “ நாவலுக்கு
வழங்கப்பட்டிருக்கிறது.25,000
ரூபாய் பரிசுத்தொகை
கொண்டது அப்பரிசு
( உயிர்மை
வெளியீடு. பதிப்பாளருக்கும்
பரிசு உண்டு ) இரு
ஆண்டுகளுக்கு ஒரு நாவலாசிரியருக்கு
இப்பரிசு வழங்கப்படுகிறது.
பிரபஞ்சன்,
சிவசங்கரி,
சுப்ரபாரதிமணீயன்,
நாஞ்சில்நாடன்,
சி.ஆர்.
ரவீந்திரன்
, வே
சபாநாயகம், மோகனன்,
நீலபத்மநாபன்
போன்றோருக்கு இவ்விருது
இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது..
கோவை
கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளைக்கு
இது வெள்ளிவிழா ஆண்டு.நிரந்தரமான
ஓவியக்கூடம், நூட்பாலைக்கண்காட்சி,
ஆண்டுதோறும்
பதினைந்து கூட்டுக் கண்காட்சிகள்,
ஓவியப்பட்டறைகள்.,
ஓவிய பயிற்சி
முகாம்களை இது நடத்துகிறது.
இதன் வெள்ளி
விழா கொண்டாட்டம் டிசம்பரில்
தொடங்கியது.அவ்விழாவில்
தலைமை விருந்தினராக்க் கலந்து
கொண்ட கிருஸ்ணராஜ் வாணவராயர்
“ வித்தியாசமாக இருப்பவர்களே
வெற்றி பெறுகிறார்கள்.
எழுத்தாளர்களும்
கலைஞர்களும் வித்தியாசமானவர்கள்.
நான் வித்தியாசமாக
இருப்பதை பார்த்து சிரிக்கிறீர்கள்.
நாம் எல்லோரும்
ஒரே மாதிரி இருப்பதைப்
பார்த்துச் சிரிக்கிறேன்.
என்றார்
விவேகானந்தர். ஆன்மீகமும்
அறிவுவியலும், பகுத்தறிவும்
கலந்த சிந்தனை மிக முக்கியம்.
நாளைய உலகில்
நல்ல பண்பு கொண்ட மனிதர்கள்தான்
அதிகம் இருக்கமாட்டார்கள்.அவர்களை
உருவாகுவதில் கலைக்கும்,
எழுத்துக்கும்
பங்கு உண்டு ”
என்றார்..
” வெட்டுப்புலி
”நாவலுக்கு
பரிசு பெற்ற தமிழ்ம்கன்
பாராட்டப்பட்டார்.
அவரின்
உரையிலிருந்து: “
வெற்றி
பெற்றவர்களின் வரலாறு வெகு
சாதராணமாய் நிறைய எழுதப்பட்டுள்ளன.
வெட்டுப்புலி
தோல்வியடைந்தவர்களின்
கதை.அரசியல்,
திரைத்துறை,
வாழ்க்கை
என்று 30களில்
பயணம் செய்ய ஆரம்பிக்கிற
நாவல்சமீபகாலம் வரை திராவிட
இயக்கவரலாறோடு சொல்லப்பட்டிருக்கிறது.
உலகின்
6000 மொழிகளில்
இந்த நூற்றாண்டில் அழியப்
போகிற மொழிகள் 3000க்கு
மேலே உள்ளது. பயன்பாட்டில்
குறைந்து வருகிற தமிழை புழங்கு
மொழியாக வைத்திருக்கவும்
மொழியைப்புதுப்பிக்கவும்
நாங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
புத்தர்,
யேசு
பேசின மொழிகள் இன்று பய்ன்பாட்டில்
இல்லை. திருவள்ளுவர்
பயன்படுத்திய மொழியை வாழ
வைக்க எழுதுகிறோம்.
மொழியை
நவீனப்படுத்தவேண்டும்.
செய்ய்யுள்
வடிவிலேயே தமிழ் இலக்கியம்
நெடும்காலம் இருந்திருக்கிறது.
தமிழ்
சிறுகதைக்கும்,
நாவலுக்கும்
100 வருடமே
ஆகிறது.. எழுத்தாளர்கள்
வாழ்க்கையை படைப்பில் முன்
மொழியும் போது மொழியையும்
முன் மொழிகிறோம்.அது
வெவ்வேறு வடிவங்களும்,
நுட்பமும்
கொண்டு இலக்கியத்தை
சுவாரஸ்படுத்துகிறது..
” ஒரு
ஊரில் ஒரு பாட்டி “ என்று
பாட்டி வடை சுட்டதில்,
காக்கா
திருடிக் கொண்டு போனதினை
இரண்டாம் முறை சொன்னாலே
அலுப்பு வந்து விடும்.
அதைப்போக்க
சொல்லும் மூறையில் நவீனம்
தேவை. நவீன
வாழக்கையை கூர்ந்து சொல்லவேண்டும்,
காப்ரியேல்
மார்க்கூஸ்ஸின் “ மறுபடியும்
சொல்லப்பட்ட கதையை “கொல்லப்படப்
போகிறவன் படகுக்காக்க்
காத்திருக்கிறான்.”
என்று
ஆரம்பிக்கிறார்.
டால்ஸ்டாய்
அன்னாகரினாவில் “ எல்லா
சந்தோசமான குடும்பங்களும்
ஒரே மாதிரி “ என்று ஆரம்பிக்கிறது..
”
தமிழ்மகனின்
சமீபத்திய ”
ஆண்பால் பெண்பால்
” நாவல்
இப்படி ஆரம்பிக்கிறது::
“ இடைப்பட்ட
நீர்ப்ப்ரப்புகள் நீருக்குள்
மூழ்கிப் போயின “ தமிழ் மொழி
பற்றின படிமமாகக் கூட தமிழ்மகன்
இந்த வரிகளை எழுதியிருக்க்க்கூடும்
தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….
சுப்ரபாரதிமணியன்
பொதுவாக இந்திய வெகுஜன இதழ்களில் குடும்பம், திருமணம், மணமுறிவு, மன முறிவு, பிரிவு, கூடுதல் சம்பந்தமான லட்சக்கணக்கான தொடர்கதைகள் இது வரை வெளிவந்திருக்கும்.பெரும்பாலும் இந்துவா சிந்தனைகள், சடங்குகளின் மேன்மை, இந்தியர்களின் குடும்ப்ப் பெருமை பற்றி சிலாகிப்பவை . இது தமிழிலும் சாத்தியமாகியுள்ளது. தமிழ் மகனின் “ ஆண்பால் பெண்பால்” நாவலில் மணமுறிவு சார்ந்த நுணுக்கமான உளவியல் சார்ந்த விசயங்கள் ஆக்கிரமித்திருருப்பதைக் குறிப்பிடலாம்.
பலவீனமான குடும்ப அமைப்புகளின் அடையாளம் இந்த மண முறிவு. மேற்கத்திய நாட்டுக்குடுமபங்கள் இந்த பலவீன்ங்களைக்கொண்டவை. எனவே மண விலக்கு அங்கு சாதாரணமாகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் 5 முதல் 10 ஆண்டுகளே திருமண உறவு பெரும்பான்மையாக நீடிக்கிறது பிறகு மண விலக்கும், மறுமணமும் சாதாரணமாகிறது .இது பல இடங்களில் ஒரு முடிவு என்பதாகிறது. இன்னும் பல விசயங்களில் புது தொடக்கம் என்றாகிறது. கருக்கலைப்பை அங்கீகாரம் செய்யாத சில கிறிஸ்துவ நாடுகளைப் போல் மணவிலக்கை அங்கீகரிக்காத சில கிறிஸ்துவ நாடுகளும் உள்ளன. இந்தியாவின் பெருநகரங்களில் மணவிலக்கு இது சாதாரணமாகி வருகிறது. இடம்பெயர்ந்து வந்து நகரங்களில் வாழும் தொழிலாளி வர்க்கத்தில் இது அதிகரித்து வருகிறது..எனக்குத்தெரிந்த ஒரு இளைஞன் தினமும் காதலிக்கு நூறு குறுஞ்செய்திகளையாவது அனுப்புவான்.இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பிரிவை ஒரு குறுஞ்செய்தியால் கூட பகிர்ந்து செய்யாமல் விலகிக் கொண்டார்கள்.
இந்த நாவலின் மையமான இந்த மணமுறிவு சார்ந்த விசயங்கள் உளவியல் பார்வையோடு சொல்லப்படுவதற்கு ஆதாரமான கதாபாத்திரங்களாக தமிழ்மகனின் முந்திய “ வெட்டுப்புலி “ நாவலில் தியாகராஜன், ஹேமலதா மற்றும் கிருஸ்ணப்பிரியா, நடராஜன் ஆகியவற்றைக் கூறலாம். ரசனை வேறுபாடு , கொள்கை வேறுபாடு அவர்களிடம் பிரிவை உருவாக்குகின்றன.தியாகராஜன் கடவுள் மறுப்பாளன், ஹேமலதா தீவிரமான பக்தை. திருமண உறவில் இது பெரிய சங்கடம் தருகிறது. அவள் வேறு ஆண் நட்பும் கொள்கிறான். தியாகராஜன் புதுவை அரவிந்தரின் பக்தனாகிற சரிவு காட்டப்படுகிறது. தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த நடராஜன் தான் காதலிக்கிற பெண் கிருஸ்ணப்ரியா, பிராமண ஜாதியைச் சார்ந்தவள் என்பதால் அவளிடமிருது விலகி வேறு பெண்ணை திருமணம் செய்து குடும்பச் சிக்கல்களால் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகிறான்.இரண்டிலும் நிகழும் சரிவுகள் எதார்த்தமாக இருந்தாலும் மனதிற்கு சங்கடம் தருகிறது. காரணம் அதை திராவிட இயக்கச் சரிவாக அடையாளம் கண்டு கொள்ள முடிவதால்தான்.
தமிழ்மகனின் நான்காவது நாவலான “ ஆண்பால் பெண்பாலி”ல் இந்த மணமுறிவு .ரசனை வேறுபாட்டால், உடல் சார்ந்த குறையால் ( ப்ரியாவிற்கு வெண்புள்ளி, அருணுக்கு ஆண்மையில்லாத் தன்மை) அமைகிறது. அவளின் எம்ஜிஆர் பற்றிய ஈடுபாடு, எம்ஜிஆர் சிவாஜி படப்பாடல் ரசனைமுரண் , சசிரேகா, அருணா என்ற பெண்களுடன் அவனைச் சேர்த்துப் பேசுவது, தங்க செயின் பறிப்பின் போது அவனின் கதாநாயக ஆவேசமின்மை, புலனாய்வு நிறுவனம் மூலம் அவளின் நடத்தையை அவன் அறிய முயல்வது, குழந்தைப்பேற்றுக்கான புனிதப் பயணங்கள், எம்ஜிஆர் ஆவி ஆக்கிரமிக்கப்பட்ட ப்ரியா எம்ஜிஆர் தமிழர் எனபதை நிருபிக்க அவளின் பயணங்கள், தோல்வி என்று தொடர்கிறது. எம்ஜிஆர் ஆவியோடு ப்ரியா தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறாள். மனபிரமை. எம்ஜிஆர் படித்தப் பள்ளி, தங்க் பஸ்பம் செய்த இடங்கள், தேர்தல் கால பிரச்சார இடங்கள் என்று தீர்த்த யாத்திரை செல்கிறாள். அருண் ஆணின் மன்னிப்பு, பெருந்தன்மை எல்லாம் காட்டுகிறான்.உறவுச் சிக்கல்களும், உளவியல் பாதிப்புகளும் அவளை மன நோயாளியாக்குகிறது. அருண் மனவிலக்கும் பெறுகிறான். அவள் குழந்தைப் பேறு அடைய முடியாதது பற்றி அவனுக்கும் சங்கடங்கள் இருக்கின்றன.
இந்நாவலில் சுமார் 10 சம்பவங்கள் அருண், ப்ரியா பார்வைகளில் திருமபச் திரும்பச் சொல்லப்படுகின்றன. ப்ரியாவின் பார்வை அழுத்தமாக அமைந்துள்ளது. நேர்கோட்டை சிதைக்கிறது ப்ரியா சொல்வதாக பிரமிளா எழுதுவது, அருண் சொல்வதாக ரகு எழுதுவது என்று கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாவலினை எழுதியவன் நானல்ல என்கிறார் தமிழ் மகன். மனுஷ்யபுத்திரனுக்கு ராயல்டி தரவேண்டியதில்லையான மகிழ்ச்சி. இது விளையாட்டாகிறது. பிரதி மாத்திரம் பிரதானமாகிறது. பெருங்கதையாடலினை இப்படி . கட்டுடைக்கிற பின்நவீனத்துவ அம்சங்களை இந்த நாவல் அதன் வடிவ அமைப்பில் பெற்றிருக்கிறது.
திராவிட அரசியல், திராவிட திரைப்படம், அதன் முக்கிய பிம்பமான எம்ஜிஆர், ப்ரியா அருண் திருமண வாழ்க்கை, நவீன வாழ்க்கையின் அம்சங்கள் என்று பல அடுக்குகளை இந்த நாவல் கொண்டிருந்தாலும் அதன் ஊடாக வரும் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை குறைவே. இந்த அடுக்குகளில் இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் இணைந்திருந்து இதை வேறு பரிமாண நாவலாக்கியிருக்கும் போக்கு இல்லாமல் இரு கதாபாத்திரங்களின் குரலில் திரும்பத்திரும்ப ஒலிப்பது பலவீனமே.பல ஆண்டுகளாக பத்திரிக்கையாளராக தமிழ் மகன் பணிபுரிவதால் கடைசி வாசகனையும் சென்றடையும் எளிமையும், சுவாரஸ்யமும் இதிலும் உள்ளது, அதுவும் திரைப்படத்துறை சார்ந்த பத்த்ரிக்கையாளனாக இவர் பணியாற்றி பல கட்டுரைகள், நூல்கள் எழுதியிருப்பதால் இங்கு இடம் பெறும் திரைப்பட உலகம் சார்ந்த தகவல்கள், அனுவங்கள் இந்த நாவலின் வாசிப்பினை சுவாரஸ்யமாக்குகிறது. சுஜாதாவின் பாதிப்பில் இவரின் சிறுகதைகள் சொல்லும் தன்மை இருப்பதாய் பலர் சொல்வதுண்டு. இந்த சுவாரஸ்யத்தின் மூலம் அது போன்ற உரைநடையாலும் எள்ளலாலும் தொடர்ந்து இந்த நாவலிலும் சாத்தியமாகியிருக்கிறது. சமகால அரசியல் நிகழ்வுகள், பதிவுகளை இந்த நாவலிலும் சரியாக அனுபவ சாத்தியமாக்கியிருக்கிறார். சரித்திரமும், தத்துவமும், அறிவியலும். சமகால அரசியலின் பதிவுகளும் இவரின் மொத்தப் படைப்புகளின் பலமாக அமைகின்றன.
பத்திரிக்கை உலகம் சார்ந்த அலுப்பான பணிகளை மீறி தமிழ் மகன் தொடர்ந்து படைப்பிலக்கிய முயற்சிகளில் அதற்காக நேரம் ஒதுக்கி, குடுமபத்தை ஒதுக்கி விட்டு ஈடுபடுவது அவரின் 4 நான்கு நாவல்கள், இரு சிறுகதைத் தொகுப்புகளின் மூலம் வெளிப்ப்ட்டிருக்கிறது. தமிழக அரசின் விருதுகள், கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சிறந்த நாவலாசிரியருக்கான இவ்வாண்டின் விருது, நாகர்கோவில் மணி நாவல் விருது, ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது போன்றவை மூலம் கவுரப்படுத்தப்பட்டிருக்கிறார். இவரின் திரைப்பட அனுபவங்களும் அது சார்ந்த திரைப்பட முயற்சிகளும் இன்னுமொரு பரிமாணமாக வெளிப்படும் சாத்தியங்கள் மகிழ்ச்சியானதே.
( கோவை இலக்கியச் சந்திப்பு ‘ தமிழ் மகனின் படைப்புலகம்” பற்றிய நிகழ்ச்சியில் ” ஆண்பால் பெண்பால் “ நாவல் பற்றிய சுப்ரபாரதிமணீயனின் உரையின் ஒரு பகுதி இது. ” வெட்டுப்புலி “ நாவல் பற்றி எம். கோபாலகிருஸ்ணன், சி ஆர் இரவீந்திரன் ஆகியோரும், அவரின்
” சிறுகதைகள் ” பற்றி கோவை ஞானியும், அவரின் படைப்பிலக்கிய செயல்பாடுகள் பற்றி இளஞ்சேரலும் பேசினர். சு.வேணுகோபால், அறிவன், பொதியவெற்பன், நகைமுகை தேவி, காசுவேலாயுதம், அவைநாயகன், ஆத்மார்த்தி, தியாகு உட்பட பலர் கலந்து கொண்டனர்)
திங்கள், டிசம்பர் 03, 2012
அழகான விருது.. கனமான பணமுடிப்பு.. நெகிழவைத்த அன்பு
சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ் தோழருமான ஜி.எஸ். மணி அவர்கள் நினைவாக மார்த்தாண்டம் தோழர்கள் நடத்தும் களம் அமைப்பின் சார்பாக டிசம்பர்2, தேதி ஆண்பால் பெண்பால் நாவலுக்கு விருது வழங்கப்பட்டது. தோழர்கள் பாபு, ஹசன், குமரவேல், மைக்கேல் போன்றவர்களின் அன்பு மறக்க முடியாதது.
தோழர் ஜி.எஸ். மணி அவர்களோடு பழகிய தோழர் எம்.எம்.அலி போராட்டக்கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார். போலீஸ்காரர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மணி அவர்கள் ஆற்றில் குதித்துத் தப்பிச் சென்ற நிகழ்வு சிலிர்க்க வைத்தது. தோழர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், மணிமாறன் ஆகியோர் என் நாவல் பற்றி நன்றாகப் பேசினார்கள். எம்.ஜி.ஆர் என்பது தமிழகத்தைப் பிடித்த ஆவி என்றார். எல்லா நடிகர்களுமே தம் பங்குக்கு நம்மைப் பேயாய் பிடித்து ஆட்டுகிறார்கள் என்றது சுவாரஸ்ய்மாக இருந்தது. அவர் சொன்ன பிறகுதான் அதுவும் சரிதான் என தோன்றியது.
அழகான விருது... தோழர் குமரவேல் வடிவமைத்தது. கனமான பணமுடிப்பு.. ரூ. 15,000/ நெகிழவைத்த அன்பு.. என 3-ம் தேதி காலை சென்னை வந்து இறங்கினேன். நாள் முழுதும் என்னுடனே இருந்த பாபு அவர்களுக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும். சிதாறல் சமணக் குகைக்கும் பேச்சிப்பாறை தொட்டி பாலத்துக்கும் அழைத்துச் சென்று காண்பித்தார். சுமார் 14 மணி நேரம்தான் நான் மார்த்தாண்டத்தில் இருந்தேன். இரண்டு மூன்று நாள் இருந்த நிறைவு.
தோழர் ஜி.எஸ். மணி அவர்களோடு பழகிய தோழர் எம்.எம்.அலி போராட்டக்கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார். போலீஸ்காரர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மணி அவர்கள் ஆற்றில் குதித்துத் தப்பிச் சென்ற நிகழ்வு சிலிர்க்க வைத்தது. தோழர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், மணிமாறன் ஆகியோர் என் நாவல் பற்றி நன்றாகப் பேசினார்கள். எம்.ஜி.ஆர் என்பது தமிழகத்தைப் பிடித்த ஆவி என்றார். எல்லா நடிகர்களுமே தம் பங்குக்கு நம்மைப் பேயாய் பிடித்து ஆட்டுகிறார்கள் என்றது சுவாரஸ்ய்மாக இருந்தது. அவர் சொன்ன பிறகுதான் அதுவும் சரிதான் என தோன்றியது.
அழகான விருது... தோழர் குமரவேல் வடிவமைத்தது. கனமான பணமுடிப்பு.. ரூ. 15,000/ நெகிழவைத்த அன்பு.. என 3-ம் தேதி காலை சென்னை வந்து இறங்கினேன். நாள் முழுதும் என்னுடனே இருந்த பாபு அவர்களுக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும். சிதாறல் சமணக் குகைக்கும் பேச்சிப்பாறை தொட்டி பாலத்துக்கும் அழைத்துச் சென்று காண்பித்தார். சுமார் 14 மணி நேரம்தான் நான் மார்த்தாண்டத்தில் இருந்தேன். இரண்டு மூன்று நாள் இருந்த நிறைவு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)