உங்களுக்கு 40 ஐ கடந்து விட்டது என்றால் இரும்புக்கை மாயவி, ரிபபோர்டர் ஜானி, லாரன்ஸ் டேவிட் போன்ற பல காமிக் ஹீரோக்களை இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள்.
குழந்தகைகளுக்காக அந்தக் காலத்தில் எழுதிய முல்லை தங்கராசு, வாண்டுமாமா, அழ.வள்ளியப்பா போன்றவர்களையும் மறந்திருக்க மாட்டீர்கள். வாண்டுமாமா பூந்தளிர் ஆசிரியராக இருந்த நேரத்தில் நானும் அதே நிறுவனத்தில் வெளியான போலீஸ் செய்தி வார இதழின் பொறுபபாசிரியராக இருந்தேன், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு.
அவரைச் சந்தித்தேன்.