திங்கள், ஆகஸ்ட் 07, 2006

காரைக்குடியில் பெரியார்


காரைக்குடியில் படுவேகமாக வளர்ந்து வருகிறார் "பெரியார்'. முதல் கட்டப் படப்பிடிப்பாக அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறுகிறது.பெரியாரின் 25 வயது முதல் 95 வயது வரையிலான வயது பருவத்தில் சத்யராஜ் நடிக்கிறார். அதுபற்றி சத்யராஜிடம் கேட்டபோது, ""பெரியாராக நடிக்க பொருத்தமான வயது இப்போது எனக்கு. ஆப்போது 52 வயது அகிறது. இப்போதும் நான் ஹீரோ வேடம் போடுவதை மக்கள் எற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் 25-30 வயது பெரியராக அரம்பித்து 95 வயது வரை பயணிக்க அதுதான் பொருத்தமான வயது என்று சொன்னேன்.பெரியாரின் மீது இருந்த இடுபாடு அந்த பொருத்தத்தை அதிகப்படுத்துகிறது. அதற்காக பெரியாரின் வீடியோ கிளிப்பிங்ஸ் சிலவற்றைப் பார்த்தேன். அவர் சொற்பொழிவின் அடியோ கேசட்டுகளையும் போட்டுப் பார்த்தேன். சற்றே வயதான ரகுவரனின் குரல் போல யூகிக்க முடிகிறது'' (வசனம் ஐன்றை பேசிக் காட்டுகிறார்). ஒரு பிஸினஸ்மேனாக சேர்மன் பதவியில் இருந்தபோது இருந்த கெட்டப், காசியில் சாமியாராக மொட்டை அடித்து காவி உடுத்தியிருந்த கெட்டப், பிறகு காங்கிரஸ்காரராக, திராவிட சிந்தனையாளராக பல் வேறு பரிமாணங்களில் அவர் எப்படி தன்னையே புடம் போட்டு வளர்த்துக் கொண்டார் என்பதை அதற்கான சம்பவங்களோடு படமாக்கி வருகிறார் இயக்குநர் ஞான.ராஜசேகரன்."பாரதி' வேடத்துக்கு இந்திப் பட வில்லன் நடிகரான சாயாஜி ஷின்டேவைக் கண்டெடுத்தது போல, "பெரியார்' படத்துக்காகவும் அதில் வரும் வரலாற்றுத் தலைவர் பாத்திரங்களுக்கான நடிகர்களை வெவ்வேறு மூலங்களில் இருந்து கண்டெடுத்திருக்கிறார்கள். திரு.வி.க.வாக எல்.ஐ.சி. நரசிம்மன், கோவை அய்யாமுத்துவாக "நிழல்கள்' ரவி, ராமநாதனாக சந்திரசேகர் நடிக்கிறார்கள். ராஜாஜியாக நடிப்பவர் சத்யராஜ் நடித்த "சவுண்ட் பார்ட்டி'யை இயக்கிய ஆர்த்திகுமார். தாடியும், நீண்ட தலைமுடியுமாக இருந்த அவருக்குள் ஒரு ராஜாஜியை கண்டு பிடித்தது சத்யராஜ்தான்! காந்திஜி வேடத்தில் கேரளத்தைச் சேர்ந்த மேடை நடிகர் ஜார்ஜ் பால் நடிக்கிறார். நாகம்மையாக ஜோதிர்மயி நடிக்க பெரியாரின் தங்கை கண்ணம்மையாக லாவண்யா நடிக்கிறார். பெரியாரின் பெற்றோர்களாக இ.வி.வி.சத்ய நாராயண - மனோரமா நடிக்கிறார்கள். காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேடி வருகிறார்கள். மின்விளக்குகள் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒளிப்பதிவை தங்கர்பச்சானும், காலத்தைத் தன் கலைநுட்பத்தால் காக்கும் பணியை அர்ட் டைரக்டர் ஜெ.கே.வும் செய்து வருகிறார்கள். படத்தில் அரசியல் சிந்தனைகளையும், சமூக சிந்தனைகளையும் வலுவாக சொல்லயிருப்பது போலவே சிலவற்றை வேடிக்கையாகவும் சொல்லியிருக்கிறார்கள். பெரியார் - நாகம்மை திருமணம் நடக்கிறது. புது மணப் பெண்ணிடம் தாலியை கழற்றி விடுமாறு கூறுகிறார் பெரியார். "தாலி புருஷனுக்கு சமம். நான் கழற்ற மாட்டேன்' என்கிறார் நாகம்மை. ""அதனால தான் கழற்றச் சொல்கிறேன். புருஷன்கூட இருக்கும்போது தாலி போட்டுக்கிட்டு இருந்தா ரெண்டு புருஷன்னு கணக்காகிடும். புருஷன் வெளியூர் போயிருக்கும் போது தாலி கட்டி யிருந்தா போதும்'' என்ற லாஜிக்கை சொல்லி நாகம்மையை நம்ப வைத்து விடுகிறார் பெரியார். மறுநாள் மாமியார் தாலி இல்லாததைப் பார்த்து மருமகளிடம் கேட்கிறார். நாகம்மை நடந்ததை விவரிக்கிறார். பெரியாரின் சேட்டை புரிகிறது இருவருக்கும். இப்படி இருந்த நாகம்மை பெரியாருடன் கள்ளுக்கடை மறியலில் இடுபட்டு பெரும் போராளியாக மாறுகிறார். பிரிட்டீஷ் அரசாங்கம், காந்திஜியை சந்தித்து கள்ளுக்கடை ஒழிப்பால் அரசு வரிப் பணம் இல்லாமல் தத்தளிப்பதாக முறையிடுகிறது. காந்திஜி சொல்கிறார்: ""கள்ளுக் கடை மறியலை நிறுத்துவது இப்போது என் கையில் இல்லை. தமிழ் நாட்டில் இருக்கும் நாகம்மை நினைத்தால்தான் முடியும்'' என்கிறார். இப்படியான எகப்பட்ட சம்பவக் கோர்வையாக உருவாகி வருகிறது "பெரியார்' படம்."பெரியார்' 21-ம் நூற்றாண்டிலும் தன் பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருக்கிறார், இந்த முறை சினிமா மூலமாக.

-தமிழ்மகன்

1 கருத்து:

பாவூரான் சொன்னது…

தகவலுக்கு நன்றி

LinkWithin

Blog Widget by LinkWithin