தினமணி முதுநிலை உதவி ஆசிரியருக்கு தமிழக அரசு விருது
சென்னை, ஜன. 2: தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராக பணியாற்றும் தமிழ்மகன் (45) இந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருதைப் பெற்றிருக்கிறார். அவருடைய "எட்டாயிரம் தலைமுறை' என்ற நூல் அப் பரிசைப் பெற்றிருக்கிறது.
தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன் சென்னையில் 1964ல் பிறந்தவர்.
இருபதாண்டுகால பத்திரிகை அனுபவம் உள்ளவர். இளைஞர் ஆண்டையொட்டி, 1984-ல் டி.வி.எஸ். நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது "வெள்ளை நிறத்தில் ஒரு காதல்' நாவல் முதல் பரிசு பெற்றது. 1996ல் "மானுடப் பண்ணை' என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது. "சொல்லித் தந்த பூமி' (1997), "ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம்' (2007) ஆகிய நாவல்களும் "சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்' (2006), மீன்மலர் (2008) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
20 நூற்றாண்டின் தமிழகத்தை விவரிக்கும் "வெட்டுப்புலி' நாவலை எழுதியிருக்கிறார். "உள்ளக் கடத்தல்', "ரசிகர் மன்றம்' ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர்.
மனைவி திலகவதி. குழந்தைகள் மாக்ஸிம், அஞ்சலி.
5 கருத்துகள்:
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தமிழ்மகன்..
அன்புடன்,
சீமாச்சு..
http://seemachu.blogspot.com
வாழ்த்துக்கள் sir :)
wishes, i too read the news in morning, bnut i did not know that it is you, all the very best
வாழ்த்துகள் தமிழ்மகன்
வாழ்த்துக்கள் :-)
கருத்துரையிடுக