வியாழன், ஏப்ரல் 12, 2007

செவ்வாய், நவம்பர் 07, 2006

ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிவரும் 'சிவாஜி' திரைப்படம் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் வேளையில் குங்குமம் வார இதழில் வெளியான இப்பேட்டியும் பரபரப்புக்குள்ளானதில் வியப்பொன்றும் இல்லை...





வியாழன், செப்டம்பர் 21, 2006

பெரியாரின் ரஷ்யப் பயண டைரிக் குறிப்பு!

சென்ற இதழ் தொடர்ச்சி

பெரியாரின் ரஷ்யப் பயண டைரிக் குறிப்பு!

"சிந்தனையாளர்' வே.ஆனைமுத்து

"திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றும் பெரியாருடைய கருத்துகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது என்றும் பெரியார் ஒரு பிற்போக்குவாதி என்றும் கூற ஆரம்பித்திருக்கிறார்களே?

பெரியாருடைய தத்துவம் என்பது தமிழர்களை - திராவிடர்களை எல்லா ஆழிவுகளிலிருந்தும் மீட்க வேண்டும் என்பதுதான். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று இல்லை, அணுக்குப் பெண் அடிமையில்லை, அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை வேண்டும், படிப்பு - வேலை வாய்ப்பும் - பதவியும் எல்லா வகுப்பினருக்கும் விகிதாசாரப்படி கிடைக்க வேண்டும்... போன்றவைதான் பெரியாரின் கொள்கைகள். இது எதுவுமே இன்னும் சீராகாத நிலையில் அவருடைய தத்துவங்கள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது, இத்தகைய கொள்கைகளால் வீழ்ந்தோம் என்பது பொருத்தமற்றது. பெரியாருடைய கொள்கைகள் என்னவென்று தெரியாதவர்கள்தான் அவருடைய கொள்கைகள் தேவையில்லை என்று சொல்கிறார்கள். ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.1970-ல் இந்திராகாந்தி அம்மையாரின் அமைச்சரவையில் மாகாண மந்திரியாக இருந்தவர் டாக்டர். சந்திரசேகர். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு சம்பந்தமான அராய்ச்சியாளர் அவர். வேலூரைச் சேர்ந்த அவர் பெரியாருக்கு நெருக்கமானவர். அவர், பெரியாரைச் சந்தித்து, ""மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்?'' என்றார்.""பெண்களுக்கு சொத்தில் சம அந்தஸ்து இருக்கிறது என்று அறிவித்து விடுங்கள், சரியாகிவிடும்'' என்றார். கேட்டவருக்கும் புரியவில்லை.""உன் மனைவிக்கும் வேலை, உன் மகளுக்கும் வேலை. அவர்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற நிலை வந்தால் பெண்களை யாரும் குறைச்சு மதிப்பிட மாட்டார்கள். ஆண் வாரிசுதான் வேண்டும் என்ற கருத்தும் போய்விடும்'' என்றார் பெரியார். ஆச்சர்யப்பட்டுப் போனார் அந்த அறிஞர்.""உலகத்தில் வேறு யாரும் சொல்லாத ஈங்களின் ஒரிஜினல் ஆலோசனை ஆது'' என்று கூறினார். அவரைப் பிற்போக்குவாதி என்பதும், அவருடைய கருத்துகளினால்தான் வீழ்ச்சியடைந்தோம் என்பதும் நேர்மையான குற்றச்சாட்டாகத் தெரியவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நாங்களும் ஒரு காரணம். பெரியாரின் சிந்தனைகள், கருத்துகள் என்ன என்பதை - அவருடைய வரலாற்றை - முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. சமுதாயம், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முழுமையாகக் கொண்டு வரவில்லை. நான் கொண்டுவந்த "பெரியார் சிந்தனைகள்' தொகுதி என்பது ஒரு பகுதி... கொஞ்சம்தான். முழுமையாக வெளிவரவில்லை. இப்போது அவருடைய கருத்துக்களை விமர்சனம் பண்ணுகிறார்கள். அவருடைய எதோ ஒரு வாக்கியத்தைப் பிடித்துக்கொண்டு விமர்சனம் செய்கிறார்கள். "பறைச்சி எல்லாம் ஜாக்கெட் போட்டுகிட்டாப்பா' அப்படீனு பெரியார் பேசியதாக ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு பேசுகிறார்கள். நடந்தது என்ன தெரியுமா? அப்போது காமராஜரை ஆதரித்துப் பெரியார் பேசுகிறார். "காமராஜர் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியிருக்கிறார்கள். ரவிக்கை போடக்கூடாத நிலையில் ருந்த அந்த சமுதாயப் பெண்கள் ரவிக்கை போட ஆரம்பித்திருக்கிறார்கள். இது காமராஜர் ஆட்சியின் சாதனை' என்றுதான் பெரியார் பேசினார். அந்தக் கூட்டத்தில் நான் இருந்ததால் சொல்கிறேன்.1950 வரை நாடார்கள் தீண்டப்படாதவர்கள். அவர்கள் வீட்டில் யாரும் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். 1920ம் செங்கல்பட்டு மாநாட்டில் நாடார்களை அழைத்து சோறாக்கச் சொன்னவர் பெரியார். அவர் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவராக இருக்க முடியும். ஆகவே, பெரியார் சொன்னதின் மையக்கருத்தைத் தெரிந்து கொள்ளாமல் பேசும் விமர்சனங்கள் பிழையானவை.

அதிபர் ஸ்டாலினை சந்திப்பதற்காக பெரியார் ரஷ்யா சென்றிருந்தார். அந்த நாளில் அவர் எழுதிய டைரி குறிப்புகள் உங்களிடம் இருப்பதாக ஒரு தகவல் அறிந்தோம்... அது பற்றி?

பெரியார் ரஷ்யாவுக்குப் புறப்பட்டது 1931-ம் ஆண்டு நவம்பர் மாதம். 1932-ம் அண்டு பிப்ரவரியில் இருந்து மே மாதம் வரை ரஷ்யாவில் தங்கியிருந்தார். 90 நாட்கள். அதில் எனக்குக் கிடைத்தது முப்பது நாள் டைரி மட்டுமே. அதில் எந்தெந்த ஊருக்குப் போனேன். யார், யாரையெல்லாம் சந்தித்தேன் என்று எழுதியிருக்கிறார். இவர் அங்கு சென்றிருந்த நாளில் மாதா கோவிலை புல்டோசர் வைத்த இடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு கோவிலையும் இடித்துத் தள்ள வேண்டாம் என்று முடிவெடுத்து அப்புறம் இடிப்பதை நிறுத்திவிட்டார்களாம். அதை குடோனாகவோ, லைப்ரரியாவோ, பள்ளிக்கூடமாகவோ வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்களாம். அதையெல்லாம் பெரியார் எங்களிடம் சொன்னார். ஆனால் கோவில்களுக்கு சொத்து இருக்கக் கூடாது என்று பறிமுதல் செய்து விட்டார்கள்.சில கோவில்களை அப்படியே விட்டுவிட்டார்கள். அங்கு நரைத்த தலையர்கள் மட்டும் போய்க்கொண்டிருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்.

அப்போது மாதா கோவிலை இடித்தவர்கள், பிறகு லெனின் சிலையையும், ஸ்டாலின் சிலையையும் இடித்தார்களே...

அதன் பிறகு வந்த தலைவர்கள் கொள்கையைத்தக்க வைப்பதைவிட, பதவிகளை தக்கவைப்பதை முதன்மையாகக் கொண்டார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் மதப்பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்டார்கள். அதையும் ரஷ்யாவில் அனுமதித்தார்கள். மதம் உள்ளே நுழைந்ததும் அது சோவியத் அரசாங்கத்தையே மாய்க்க காரணமாகிவிட்டது. இப்போது அங்கிருந்து வருகிறவர்கள் நாங்கள் அங்கே மிகவும் கஷ்டப்படுகிறோம் என்கிறார்கள். விபசாரம் நடக்கிறது, கொலை நடக்கிறது, சூதாட்டம் நடக்கிறது...

பெரியாருடன் பழகியதில் மறக்க முடியாத சம்பவம் என்று எதைச் சொல்லுவீர்கள்?

பெரியார் நூல்களை தொகுக்கும் பணியில் இருந்தபோது, "இரங்கல் செய்திகள்' என்று ஒரு பகுதியைத் தொகுத்தேன். இரங்கல் செய்திகள் என்றால் தலைவர்கள் மறைவுக்கு அவர் விடுத்த அறிக்கைகள். காந்தி, ஸ்டாலின், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் மறைவுக்கு அவர் விடுத்த அறிக்கையைப் படித்துக் கொண்டு வந்தபோது, திடீர் என்று, ""நாகம்மாள் செய்தி இதில் இல்லையா?''னு கேட்டார். "கவனக் குறைவாக விட்டுவிட்டோமே' என்று வருத்தப்பட்டு, அன்று இரவே அதை தேடி எடுத்து எழுதிக் கொண்டு வந்து படித்துக் காட்டினேன். நான் படித்துக்காட்டியது 73 ஜூலை மாதம், இவர் நாகம்மைக்கு இரங்கல் கடிதம் எழுதியது 33 மே மாதம். 40 வருஷ இடைவெளி. என்ன ஆச்சர்யம்!நான் முதல் பாராவைப் படிக்கிறேன். இவர் இரண்டாவது பாராவை அப்படியே சொல்கிறார். "'நாகம்மையார் மறைவு எனக்கு துணை போயிற்றென்று சொல்வேனா? ஓர் அமைச்சு போயிற் றென்று சொல்வேனா? அதரவு போயிற்றென்று சொல்வேனா? அடிமை போயிற்றென்று சொல்வேனா? எல்லாம் போயிற்றென்று சொல்வேனா?'' என்று சொல்லிக் கொண்டே அழுதார். எனக்கும் அழுகை வந்துவிட்டது. இந்தச் சம்பவத்தை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.

"பெரியார்' என்ற பெயரிலேயே திரைப்படம் தயாராகிறதே...?

அந்தப் படம் பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஞான ராஜசேகரன் என்னுடன் கலந்து பேசினார். அவர் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கேட்டார். 2005ல் திருவனந்தபுரத்தில் அவர் பதவியில் இருந்தார். அப்போது நான் அங்கு வைக்கம் போராட்டம்பற்றி ஆய்வுக்காகச் சென்றிருந்தேன். அப்போதும் சந்தித்தார்.

-தமிழ்மகன்
படங்கள்: பாலா

வெள்ளி, செப்டம்பர் 08, 2006

பெரியார் சிந்தனைகள் மீண்டும் வெளிவரும்

பெரியாருடன் பழகிவந்த தொண்டர்களில் குறிப்பிடத் தக்கவர், சிந்தனையாளர் தோழர் ஆனை முத்து. பெரியார் எழுதிய கட்டுரைகள், பேசிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாகப் பதிவு செய்த பெருமை அவருக்கு உண்டு.
"பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்' என்ற தலைப்பில் வெளியான அந்த மூன்று தொகுதிகள் இன்றும் பெரியாருக்கான ஆதார பொக்கிஷமாக விளங்கி வருகின்றன. ஜெராக்ஸ் போன்ற வசதி இல்லாத காலகட்டத்தில் கைகளால் எழுதி, தொகுத்து வெளியிடப்பட்ட சுமார் 3400 பக்கங்கள் கொண்ட நூல் அது. அந்தத் தொகுதிகளை பெரியார் சரிபார்த்துக் கொடுத்த அந்த நெகிழ்ச்சியான, முப்பதாண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார் அவர்.

பெரியாருடைய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி எற்பட்டது?

1970-ம் ஆண்டு திருச்சியில் சிந்தனையாளர் கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்தோம். அதை பெரியார்தான் துவக்கி வைத்தார். (07.03.1970)
பெரியாரை தலைப்புவாரியாகப் பேசவைத்து அதைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதுதான் அந்த அமைப்பின் நோக்கம். மீண்டும் 72-ல், அதையே விரிவாகச் செய்யலாம் என்று தீர்மானித்தோம். பெரியாரின் பேச்சு, எழுத்து அனைத்தையும் தொகுத்து வெளியிடலாம் என்று சிந்தனையாளர் கழகம் மூலம் தீர்மானம் போட்டோம்.
பொருளடக்கம் ஒன்றைத் தயாரித்து அவரிடம் காண்பித்தேன். அது அவருக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை என்பது தெரிந்து, மீண்டும் ஒரு மாதம் ஆலோசித்து மற்றொரு பொருளடக்கம் தயாரித்துக் காண்பித்தேன். அது அவருக்கு திருப்தியாக இருந்தது. "ஆரம்பிச்சுடுங்க' என்றார்.
திருச்சி பெரியார் மாளிகையில் இருந்து தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதி தந்தார்.
72 ஜனவரியில் ஆரம்பித்து 73 செப்டம்பர் 13-ல் முடித்தேன்.
இடைவிடாமல் படித்து எதை எதை பதிப்பிக்க வேண்டும் என்று குறிப்பெடுத்துக் கொள்வேன். அச்சுக்குப் போகவேண்டிய பத்திகளை சிவப்பு மையால் "மார்க்' செய்து விடுவேன். அவ்வளவையும் நானே எழுத வாய்ப்பில்லையே. அவற்றையெல்லாம் நகல் எடுக்கிற வேலையை 73 பேரை வைத்து செய்தோம். அதை பெரியாரிடம் காட்டினேன். அதை சில இடங்களில் படிக்கச் சொல்லிக் கேட்டார். அவர் அப்படி கேட்ட 500 பக்கங்களில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார். கடைசி பக்கத்தில் "சிந்தனையாளர் கழகம் இதை நூலாக வெளியிட உரிமை அளிக்கிறேன்' என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். உரிமை எழுதிக் கொடுத்தது ஆகஸ்டில். அச்சுக்குக் கொடுத்தது செப்டம்பர் 17-ல்.
நவம்பர் 30-ம் தேதி வாக்கில் 400 பக்கங்கள் அச்சாகியிருந்தது. இந்தப் பக்கங்கள் வரை பெரியார் பார்த்து விட்டார். இந்தப் பக்கங்களைப் பெரியார் பார்த்தது கடலூரில் வக்கீல் ஜனார்த்தனம் வீட்டில். பின்னர் அவர் ஐகோர்ட் ஜட்ஜ் ஆகி, இப்போது சென்னையில்தான் இருக்கிறார்.
அடுத்த 25 நாட்களில் பெரியார் இறந்துவிட்டார் (24.12.73).
பிறகு 74-ஜூலையில் "ஈ.வெ.ரா. பெரியார் சிந்தனைகள்' மூன்று தொகுதிகளை வெளியிட்டோம். புத்தகம் தயாரிக்க நாங்கள் இரண்டு முறைகளைக் கையாண்டோம். ஒன்று நன்கொடை வசூலிப்பது. இரண்டு, முன்பதிவு செய்வது. முன்பதிவு செய்வதற்கு ரூ.100 கட்டணம். இரண்டுக்குமே ஒத்துழைப்பு இல்லை. வேறு வழி இல்லாமல் கடன் வாங்கித்தான் அச்சிட வேண்டியதாக இருந்தது. மூவாயிரம் பிரதிகள் அடிக்க 60 ஆயிரம் ரூபாய் ஆனது. இரண்டு ரூபாய் வட்டி. புரோநோட்டு எழுதிக் கொடுத்து தலைவர், பொருளாளர், செயலாளர் கையெழுத்துப் போட்டோம்.
79- ஆண்டுதான் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. கடனை அடைத்து, மீதி இருந்த பணத்தில் ஒரு பகுதியை எடுத்து மலையாளத்தில் 200 பக்க அளவில் பெரியார் சிந்தனைகளை வெளியிட்டோம். அதற்குத் தலைப்பு "நானும் நீங்களும் -பெரியார் ஈ.வெ.ரா.' திருவனந்தபுரத்தில் வெளியிட்டோம். விற்பனை உரிமையை அங்கிருந்த புத்தக விற்பனையாளர் ஒருவரிடம் கொடுத்தோம். 2000 பிரதிகளுக்கு 20 அயிரம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். அவரோ, ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு ஏமாற்றி விட்டார். இதனாலும், பொருளாதார வசதி இல்லாததாலும் நாங்கள் தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது.
1980 -ல் நிறையபேர் ஈ.வெ.ரா. சிந்தனைகளை மீண்டும் வெளியிட வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். எப்படியும் அடுத்த அண்டில் "பெரியார் சிந்தனைகள்' தொகுதிகள் மறுபதிப்பு உறுதியாக வெளிவரும்.

பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தவர் நீங்கள். அந்த அனுபவங்களையும் அதன் பயன்களையும் விவரிக்க முடியுமா?

மத்திய அரசு பதவிகளில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், சட்டத்திலேயே அதில் இடம் இருப்பதை முதன்முத-ல் நான்தான் எடுத்துச் சொல்ல அரம்பித்தேன். சட்ட நூல்களில் எனக்கிருந்த ஆர்வம்தான் இதற்குக் காரணம். 1975-ல் இதைச் சொன்னேன். அதை யாரும் அப்போது காதில் போட்டுக்கொள்ளவில்லை.
1978ல் இந்தியா முழுக்க இது சம்பந்தமாக ஆர்வம் உள்ளவர்களைச் சந்தித்துப் பேசினேன். 1982 வரை நான்கு அண்டுகள் இடைவிடாமல் இந்தியா முழுவதும் சுற்றினேன். எல்லா கட்சித் தலைவர்கள், மந்திரிகள், எம்.பி.க்களைச் சந்தித்து இப்படி சட்டத்தில் இடம் இருப்பதையும், நாம் முயற்சி செய்தால் பெற்றுவிடலாம் என்றும் விளக்கிச் சொன்னேன்.
பி.பி. மண்டல் என்பவரைத்தான் முதலில் சந்தித்தேன். அரியானாவைச் சேர்ந்தவர். அவர் அப்போது எம்.பி.யாக இருந்தார். அடுத்து தனிக்லால் மண்டல் என்ற மாகாண அமைச்சரைச் சந்தித்தேன். அவர் பீகார் ஜமீந்தார். ஜனதாதள அமைச்சர். அமைச்சர் நான் சொன்ன கருத்தை எற்றுக்கொண்டு, நான் சென்னையில் போட்ட மாநாட்டிலும் கலந்து கொண்டார். அடுத்து பானுபிரதாப் சிங் என்ற விவசாய அமைச்சரைச் சந்தித்தேன். அரியானா, பஞ்சாப், உ.பி., பீகார் எம்.பி.க்களை எல்லாம் சந்தித்துப் பேசினேன்.
எங்களின் மார்க்சிய, பெரியாரிய பொது உடைமைக் கட்சிதான் சென்னையில் 78-ம் அண்டு ஜூன் 24-ந் தேதி பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் மாநாட்டை நடத்தியது. பிறகு 79 மார்ச்சில் புதுடில்யில் பெரிய ஊர்வலம் நடத்தினேன். அதே அண்டு நவம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் ஒன்றும் டில்லியில் நடத்தினேன். 2000 பேர் கைதானோம்.

வடமாநிலங்களில் இருந்தபோது எங்கு தங்குவீர்கள்?

சத்திரங்களிலும், நண்பர்கள் வீடுகளிலும், எம்.பி. வீடுகளிலும் தங்கினோம். ரோட்டு கடைகளில் சாப்பிட்டோம். நான்கு ஆண்டுகள் ஓடின. சந்நியாசி வாழ்க்கைதான். எப்படியாவது இட ஒதுக்கீடு சம்பந்தமான விழிப்புணர்வை எற்படுத்தவேண்டும் என்று போராடினேன்.

இங்கிருந்து இதற்காகப் புறப்பட்டுப் போனது எத்தனை பேர்?

சேலத்தில் சித்தையன் என்று ஐரு பெரியவர் இருந்தார். இப்ப இறந்து விட்டார். பெரியாருடைய அண்ணனின் மருமகன் சேலம் ராஜு, முத்துச்சாமி என்று ஒருவர், இவர்களுடன் நான். நான்கு பேரும்தான் சுற்றுவோம். அதற்காக லாபம் என்னவென்றால் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. இப்போது கல்வியில் இட ஒதுக்கீட்டுக்காக 1991-ல் இருந்து போராடி வருகிறோம்.

"திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றும், பெரியாருடைய கருத்துகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது என்றும், பெரியார் ஒரு பிற்போக்குவாதி என்றும் கூற அரம்பித்திருக்கிறார்களே?

(அடுத்த வாரம்)

செவ்வாய், செப்டம்பர் 05, 2006

அபசகுனம்

அபசகுனம்

குறுக்கே பாய்ந்த பூனையை
லாரி அடித்துப் போட்டுவிட்டது
பூனைக்கு நேரம் சரியில்லை

புதன், ஆகஸ்ட் 30, 2006

பெரியாரைப் புரிந்து கொள்ளுதல்

விஷால் என்பவர் நான் எழுதிய பெரியார் படத்தின் நேர்காணலுக்கு மறு மொழி அளித்துள்ளார். பெரியார் தன் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட சாதியைத் தாக்குவதன்றி உருப்படியாக ஒன்றும் செய்ததில்லை என்று கூறியுள்ளார். அதற்கு பதிலாக இந்தக் கட்டுரை.
ஆறாம்திணை இணைய இதழில் வெளியான கட்டுரை இது.




ஈ.வெ.ரா. எனும் பெரியார்


-மதுசூதனன்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழக சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஓர் நீண்ட தொடர்ச்சியை பேணிக்கொண்டு வந்த ஒரு நபர் ஈ.வே.ரா. தமிழ் பேசும் பகுதிகளில் நீண்டகாலமாக தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்தும் ஏதேனும் ஓர் இயக்கத்தின் தலைமையில் இருந்தவர் எனலாம். அவர் இறப்புக்குப் பின்னரும் தமிழக சமூக அரசியல் பண்பாட்டு இயக்கத்தில் அவரது தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல 'திராவிட அரசியல்', 'திராவிட இயக்கம்', 'திராவிட கருத்துநிலை' போன்றவற்றின் முகிழ்ப்புக்கும் -யக்கநிலைக்கும் நிலைபேறாக்கத்துக்கும் பெரியார் வழிவந்த ஆளுமை முக்கிய இடம் பெறுகிறது. தமிழக அரசியலின் சமகால திசைப்போக்கு திமுக x அதிமுக இடையிலான உறவு x முரண் என்னும் தொடர்ச்சியின் ஓட்டத்துக்கும் கூட பெரியார் என்னும் ஆளுமை பயன்பட வேண்டியுள்ளது. அதாவது பெரியார் என்ற சிந்தனையாளரின்- தலைவரின் கீழ் இயங்கிய தொண்டர்களின் தோன்றல்களில் தான் இன்றைய திராவிட அரசியலின் நீட்சி. இதனால்தான் திமுக x அதிமுக x மதிமுக என தொடரும் கட்சிகளில் 'பெரியார்' திருவுருவம் இன்றுவரை லேபிலாக பயன்படுகிறது.
பெரியாரின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் பெரியார் குறித்த ஒரே மாதிரியான பிப்பத்தையே கட்டமைக்கின்றனர். அதாவது நாத்திகர், பார்ப்பன எதிர்ப்பாளர், இடஒதுக்கீட்டிற்காகவும் தனிநாட்டிற்காகவும் போராடியவர், பெண்விடுதலை பேசியவர் என்பவைதான் இந்த பிம்பத்தின் மூலம் வெளிப்படும் பெரியாரின் பரிமாணங்கள். இதுவரையான விவாதங்களும் சர்ச்சைகளும் இந்த அம்சங்களில் மட்டுமே சுருங்கிவிடுகின்றன. அல்லது சுருக்கப்பட்டுவிட்டன.
பெரியார் உருவான சூழலை, அவர் தீவிரமாக இயக்கிய தமிழ்ச்சூழலை பின்னோக்கில் பார்க்கும்போது பெரியாரை அவ்வளவு எளிதாக மேற்குறித்த அம்சங்களுக்குள் மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. அவரது வாழ்வும் சிந்தனையும் அதன் வழியிலான செயற்பாடுகளும் ஒரே தன்மையிலான நேர்கோட்டுப் பாதையில் அமையவில்லை. சிக்கலான முரண்கள் நிறைந்த ஆனால் பலபரிமாணங்கள் நிரம்பியவையாகவே உள்ளன. எந்த ஒற்றைவரையறைக்குள் ஆட்படாத கலகத்தன்மை வாய்ந்த பண்பைக் கொண்டிருந்தது. நிலவும் ஆதிக்க அதிகார சித்தாந்தப்பிடிமானங்களுக்கு எதிராக -யக்கும் தீவிரத்தன்மை கொண்டிருந்தது. இந்தத் தீவிரம் அவரது வாழ்க்கை அவருக்குக் கற்றுக் கொடுத்தது.
சில நூற்றாண்டுகளுக்கு முன் கன்னட தேசத்திலிருந்து தமிழ்நாட்டில் குடியேறிய கன்னட பலிஜா நாயுடு வகுப்பினர் 'நாயக்கர்' பட்டப் பெயர்பூண்டு குடியேறிய இடத்தையே தாய் நாடாகக் கருதி வாழ்ந்து வந்தனர். இம்மாதிரி குடும்பத்தில் வந்தவர்தான் வேங்கடப்ப நாயக்கர். -வர் ஈரோடு நகரத்தில் வாழ்ந்து வந்தார். சிறுவயதிலேயே ரொம்பவும் சிரமப்பட்டு படிப்படியாக வாழ்க்கையின் உயரத்துக்கு வந்தவர். சிறந்த வியாபாரியாக எல்லோராலும் பாராட்டப்படும் நபராக வளர்ந்தார். இவரது மனைவி சின்னத்தாய் அம்மாள். -வர்களுக்கு மகனாக 1879 செப் 17-ல் பெரியார் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஈ.வே. ராமசாமி. இவருக்கு ஓர் அண்ணன் மற்றும் -ரண்டு சகோதரிகள் உடன்பிறந்தோர்.
சிறுவயதிலேயே செல்லமாக வளர்ந்தார். ஆனாலும் பெற்றோர்களுக்கு கீழ்ப்படியாமல் தன்னிச்சையாக வளர்ந்து வந்தார். வேங்கடப்ப நாயக்கரின் சிறிய தாயார் ஈவெராவைத் தத்து எடுத்துக் கொள்ள விரும்பினார். சிறிது காலம் அவரது வளர்ப்பில் வளர்ந்தார். ரொம்பவும் சிரமப்பட்ட வாழ்க்கையை அவருடைய சிறிய தாயார் வீட்டில் வாழ்ந்தார். கட்டுப்பாடற்று திரிந்து கொண்டு வந்தார்.
திண்ணைப் பள்ளியில் சேர்ந்து படிக்கத்தொடங்கினார். அங்கு படிக்க வந்த பலதரப்பட்ட மாணவர்களுடனும் சாதிபேதமின்றி சகஜமாக பழகி வந்தார். செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்த பையன் அந்தஸ்தும் பெருமையும் கொண்டிருக்கக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து முரடனாகி திரிகிறான் என்று அவருடைய பெற்றோர்கள் கவலைக்கொண்டனர். பாட்டியிடமிருந்து மகனை மீண்டும் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். இவரைத் திருத்துவதற்காக பல தண்டனை முறைகளை கடைப்பிடித்தனர். ஆனால் இவர் தனக்கு சரியென்று பட்டதைச் செய்வதில் உறுதியாக இருந்தார்.
மற்ற சாதிப் பையன்களுடன் சேர்ந்து விளையாடுவதை இவர் நிறுத்ததாதல், தண்டனைகளும் நிறுத்தப்படவில்லை. எதையும் சகித்துக் கொள்ளும் மனவலிமையை சிறுவயது முதல் வளர்த்துக் கொண்டார். ஓருமுறை பிற்காலத்தில் சிறுவயது காலத்தை இவ்வாறு நினைவுபடுத்தினார். "காலில் விலங்கு இடப்பட்டேன். ஒருதடவை பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப்பட்டேன். இரு தோள்களிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்து கொண்டு திரிந்தேன். அப்போதும் அந்தப் பிள்ளைகளுடன் விளையாட போய்விடுவேன்''
இது போன்ற மனவுறுதி சிறுவயது முதல் ஈ,வே.ராவுக்குள் வளர்ந்து வந்தது. சிறிது காலம் ஆங்கில வழிப் பாடசாலையில் ஈ.வே.ரா சேர்க்கப்பட்டார். ஆனால் படிப்பில் கவனம் செல்லவில்லை. புராணம் தலைவிதி பக்தி போன்றவை குறித்து ஏதாவது விவாதம் செய்து கொண்டேயிருப்பார். பக்திமான்களை வம்புச்சண்டைக்கு இழுப்பார். பக்திமான் குடும்பத்தில் இப்படி ஒரு பிள்ளையா? என்று எல்லோரும் திட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் ஈ,வே.ராவிடம் விவாதம் செய்வது அதனோடு தனது ஆற்றலை வளர்த்துக் கொள்வது என்பது இயல்பாக வளர்ந்து வந்தது. 12 வயதிலிருந்து 19 வயதுக்குள் அவரிடம் பகுத்தறிவுச் சிந்தனை தூண்டிவிடப்பட்டு வளர்ந்து வந்தது.. ஈ.வே.ரா சிந்தனையில் நாத்திகக் கொள்கை படிப்படியாக உருப்பெறத் தொடங்கியது.
தந்தையின் வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார். தனது திறமையால் வியாபாரத்தில் நன்கு தேர்ச்சி பெற்றார். தனியே வியாபாரத்தை கவனித்து அதைப் பெருக்க ஆரம்பித்தார். அதேநேரம் இளைஞனுக்குரிய மைனர் விளையாட்டுகளிலும் ஈடுபடத் தொடங்கினார். ஈ.வே.ராவின் தவறான போக்கை தடுத்து நிறுத்த அவருக்கு கால்கட்டு போட வேண்டுமென முடிவு செய்தனர். ஆனால் ஈ.வே.ரா மாமன் மகள் நாகம்மாவையே தான் திருமணம் செய்ய முடியுமென உறுதியாக இருந்தார். அதன்படி அவரையே திருமணமும் செய்துக் கொண்டார். மேலும் வர்த்தகம் பெருகியது. ஈ.வே.ராவுக்கு நண்பர்கள் கூட்டமும் பெருகியது.
தனது 25வது வயதில் ''தந்தையிடம் கோபித்துக் கொண்டு துறவறம் மேற்கொண்டார். காசியில் சில காலம் வாழ்ந்தார். இந்த வாழ்வு அவரது சிந்தனையில் பகுத்தறிவில் பலவித மாறுதல்களை ஏற்படுத்தியது. புராண இதிகாசங்களை ஆழ்ந்து படிக்கவும் விவாதத்தில் ஈடுபடவும் அவருக்கு கற்றுக் கொடுத்தது. பின்னர் ஒருவாறு வீடு திரும்பினார்.
முற்றிலும் வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். 1905-1919 வரையிலான காலம் ஈ.வே.ராவுக்கு 'வர்த்தகம்' சமூக ஊழியர் என்ற தகுதிகளை வழங்கியது. பல்வேறு பதவிகளும் பொறுப்புகளும் அவரைத் தேடி வரத்தொடங்கின. ஈரோட்டில் ஈ.வே.ரா முக்கியமான நபராக உயர்ந்தார், வளர்ந்தார். நகரசபைத் தலைவர் உள்ளிட்ட 24 பதவிகளில் ஈ.வே.ரா முக்கிய பொறுப்புகளில் இருந்தார். வர்த்தகம் பொதுத் தொண்டு இவற்றின் மூலம் ஈ.வே.ரா ஆக்கபூர்வமான தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.
காங்கிரஸ் கொள்கையில் படிப்படியாக ஆர்வம் கொண்டார். 1914ஆம் ஆண்டிலிருந்து ஈ.வே.ரா ஈரோட்டிலும் சென்னையிலும் காங்கிரஸ் கூட்டங்களில் பேசினார். சில கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். இதே நேரம் நீதிக்கட்சியினருடன் கூட ஦ருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். அக்கால முக்கியமான தலைவர்கள் அனைவருடனும் நெருங்கி பழகி வந்தார். பிரமாணர் x பிரமாணரல்லாதார் என்ற சிந்தனை நீதிக்கட்சியினரால் ஆழமாகவே அன்று முன்வைக்கப்பட்டது. இது ஒரு கோரிக்கையாகவும் சிந்தனையாகவுமே இயங்கத் தொடங்கியது.
சென்னை மாகாணத்தை குறிப்பாக தமிழ்நாட்டு அரசியலைப் பாதித்த காரணங்களால் பிராமணர் x பிரமாணரல்லாதார் பிரச்சனை முக்கியமானதாக இருந்தது. இது பல்வேறு தளங்களிலும் வெளிப்பட்டது. பிராமணர் அல்லதார் நலன்களைக் காக்கும் பிரதிநிதியென்று ஜஸ்டிஸ் கட்சிக்குமிடையில் வேற்றுமை நிலவியது மட்டுமல்லாது, காங்கிரசுக்குள்ளும் பிராமணர் அல்லாதார் தேசியம் என்று குறிப்பிடக்கூடிய உட்போக்கு ஒன்றும் -ருந்தது. ஆக இந்த சமூக முரண்பாட்டுத்தன்மை ஈ.வே.ராவின் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் தாக்கம் செலுத்தக்கூடியதாகவே பின்னர் அமைந்தது.
1919ஆம் ஆண்டில் சென்னை மாகாண சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. வரவேற்புக் குழுவின் தலைவராக ஈ.வே.ரா செயல்பட்டார். மேலும் தேசிய அரசியலிலும் முக்கியமான நிகழ்வுகள் அன்றைய காலக்கட்டத்தில் நடைப்பெறத்துவங்கின. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. இது மக்களிடையே பலத்த கிளர்ச்சியை உருவாக்கியது. ஈ.வே.ரா ஈரோடு நகரசபை தலைவர் பதவி உட்பட 29 பதவிப் பொறுப்புகளிலிருந்து -ராஜினாமா செய்தார். அதே போன்று சேலம் நகரசபைத் தலைவர் பொறுப்பை ராஜாஜியும் ராஜினாமா செய்தார்.
ஈ.வே.ரா காங்கிரசில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கினார். காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். தனது ஆடம்பர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு காந்தி பக்தராக மாறினார். கதராடை அணியத் தொடங்கினார். ஈ.வே.ரா குடும்பமே சமூக சேவைக் குடும்பமாக மாறியது. 1920ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஈ.வே.ரா கலந்து கொண்டார். இங்கு தான் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் முடிவை கிராம மட்டம் வரை கொண்டு செல்ல தீவிரமாக -றங்கினார். மேலும் கள்ளுகடை மறியலிலும் தீவிரமாக பங்குக் கொண்டார். ஒருமாத சிறைத் தண்டனையும் பெற்றார்.
இதன்பிறகு ஈ.வே.ரா தீவிர சமூக அரசியல் செயற்பாட்டாளராக மாறத் தொடங்கினார். அதற்கேற்ற மனவுறுதியையும் சிந்தனையும் வாய்க்கப் பெற்றவராக விளங்கினார். காந்திஜி , ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் பழகி தன்னிகரற்ற தலைவராக உயர்ந்தார். 1924ஆம் ஆண்டில் ஈ.வே.ரா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது ஈரோட்டு இல்லத்தை அலுவலகமாக்கிச் செயற்பட்டார். இதனால் ஈரோடு அரசியலில் முக்கிய இடம் பெறத் தொடங்கியது.
1924 மேயில் திருவனந்தபுரம் வைக்கம் நகரின் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் நடமாடவோ அவற்றை கடந்து செல்லவோ உரிமை கிடையாது. இதற்கு எதிராக இந்த மக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் ஈ.வே.ரா கலந்து கொண்டார். இந்தப் போராட்டம் வேகம் கொண்டது. ஈ.வே.ரா கைது செய்யப்பட்டார். இந்த வைக்கம் போராட்டம் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே உரிமைகளுக்காக போராட வேண்டுமென்ற வேட்கையை வெளிப்படுத்தியது. இந்தப் போராட்டத்தில் ஈ.வே.ரா கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு இருந்த சமூகநீதி சமூக சமத்துவம் பற்றிய விருப்பமும் போராட்ட மனவுறுதியும் செயலாக வெளிப்பட்டது.
வ.வே.சு. ஐயர் காந்திய வழிப்படி நெல்லை மாவட்டம் சேரமாதேவியில் குருகுலம் நடத்தி வந்தார். இங்கு பிராமணப்பிள்ளைகளுக்கு தனிச்சாப்பாடு, பாயசம் என்றும் பிராமணர் அல்லாத பிள்ளைகளுக்கு சோறும், சாப்பாடும் மட்டும்தான் என்று தனிதனியாக பந்தி பரிமாறப்பட்டு வந்தது. இது ஒரு பெரும் பிரச்சனையாக காங்கிரசில் விவாதிக்கப்பட்டது.
வவேசு ஐயர் இப்பிரச்சனையில் தனது நிலையில் உறுதியாக இருந்தார். பாரபட்சம் காட்டுவது நியாயம் என்றே கருதிவந்தார். ஈ.வே.ரா, திருவிக உள்ளிட்ட தலைவர்கள் குருகுலத்தில் நடைபெறும் இந்த இழிச்செயல் கண்டு கொதித்தார்கள். இது வெறுமனே சமபந்தி போஜன விஷயம் மட்டுமல்ல, இது ஒரு சாதி இன்னொரு சாதியைவிட உயர்ந்ததென்ற பிரச்சனை. இந்த வேறுபாடு ஒழிய வேண்டும். பிராமணர், பிரமாணரல்லாதவரிடையே ஏற்றத்தாழ்வுகள் நீங்கினால் போதாது, அவர்களை பஞ்சமர்களும் தங்களைச் சமமானவர்கள் என்று ஏற்க வேண்டும் என ஈ.வே.ரா வாதிட்டார். ஆனால் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் இப்பிரச்சனையில் கொள்கை சார்ந்து செயற்பட பின்வாங்கியது.
இந்த குருகுலப் பிரச்சனை ஈ.வே.ரா வாழ்க்கையிலும் சிந்தனையிலும் அவர் தொடர்ந்து மேற்கொள்ளும் பாதையிலும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஈ.வே.ரா விலகிச் செல்லும் போக்கை துரிதப்படுத்தியது. மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். அதற்குத்தான் பாடுபட வேண்டுமென்ற வேட்கை அவரை உந்தித் தள்ளியது. வைக்கம் பேராட்டம், குருகுலப் போராட்டம் ஈ.வே.ராவின் சிந்தனையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.
தமிழ்நாட்டில் தன் கருத்துகளை வெளியிடுவதற்காக 1925 முதல் 'குடியரசு' என்ற பத்திரிகையை தொடங்கினார். சமூகநீதி, சமூக சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயரிய நோக்கங்களைக் குறித்த அக்கறையும் விழிப்புணர்வும் மேற்கிளம்ப குடியரசு தனது கடமையாகக் கொண்டு செயற்பட்டது.
1926ஆம் ஆண்டு ஜனவரி 24ம் தேதியிட்ட குடியரசு இதழில் ஈ.வே.ரா எழுதிய சுயராஜ்யமா? சுயமரியாதையா? என்னும் தலையங்கம் அவருடைய கொள்கைப் பிரகடனமாகக் கருதலாம். இதையடுத்து சுயமரியாதை -யக்கம் தொடங்கினார். 1928லிருந்து சுயமரியாதைப் பிரச்சாரத்தில் இறங்கினார். 1927ஆம் ஆண்டில் 'நாயக்கர்' என்ற சாதிப்பெயரை ஈ.வே.ராமசாமி கைவிட்டதிலிருந்து ஈ.வே.ரா என்றே அழைக்கப்பட்டார்.
"ஈ.வே.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் -ருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். -தைத்தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு -ல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்'' என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்து சமுதாயத் தொண்டாற்ற வந்தவர்.
மானமும் அறிவும் உள்ள சமுதாயத்தை உருவாக்க எவ்வெவ்வழியில் பாடுபட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அனைத்து வகையான அடிமைத்தனங்கள், கட்டுத்தளைகள், ஒடுக்குமுறைகள் யாவற்றிலிருந்தும் விடுபட்டு புதிய சமுதாயம் சமத்துவ சமுதாயம் சுயமரியாதை சமுதாயம் உருவாகவேண்டுமென்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.
''நமது நாடு -ன்றைக்கும் சாதி அமைப்பின் கீழ் -ருந்து வருகிறது. அதுபோலவே நமது நாடு இன்னும் மதஅமைப்பின் கீழ் இருந்து வருகிறது. அதுபோலவே நமது நாடு இன்னும் பொருளாதார பேத அமைப்பிலேயே இருந்து வருகிறது.
இதையெல்லாம்விட மோசம் மிகமிக் கீழ்த்தரமான மூடநம்பிக்கை அமைப்பிலேயே நமதுநாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் மக்களுக்குப் போதிய கல்வி -ல்லாத அமைப்பில், கல்வியிலும் பேதநிலை உள்ள கல்வி அமைப்பிலும் நமது நாடு இருந்து வருகிறது.
இவ்வளவு பேதநிலை அமைப்பு உள்ள நாட்டில் ஜனநாயகம் என்றால் இதன் பொருள் என்ன? நாட்டில் ஒரு பெரும் சூதாட்டம் நடந்து வருகிறது. அதில் வலுத்தவன் ஆட்சியாக நடந்து வருகிறது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்?''
இவ்வாறு 'சமுதாய மாற்றம்', 'விடுதலை, சுதந்திரம்' பற்றிய சிந்தனைகளை உரத்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்தார். அவரது பேச்சும் எழுத்தும் மக்களிடையே பெரும் மாறுதல்களை ஏற்படுத்தத் தொடங்கியது. சுயமரியாதை இயக்கம் தமிழ்ச்சமுதாயத்தில் அதுவைர ஏற்படுத்தாத தாக்கத்தை ஏற்படுத்தியது.
''நான் ஒரு சுதந்திர மனிதன். எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கிற நிபந்தனையின் பேரில்தான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்க வில்லையென்றால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.'' என ஈவெரா தெரிவிக்கும் கருத்தில் உள்ள நியாயத்தை எவராலும் ஒதுக்கிவிட முடியாது.
1926-30 இடையிலான காலம் ராமசாமியின் அரசியல் சாதிஒழிப்பு பற்றிய சிந்தனை இலட்சிய வடிவம் பெற்றது. 1931-1937காலக்கட்டம் அவரது வாழ்க்கையில் வேறுபட்ட பரிமாணம் பெற்றது எனலாம். 11 மாதங்கள் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டதில் சோவியத் ரஷ்யாவின் அனுபவங்களையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு பொதுவுடைமைக் கொள்கையின்பால் தீவிர ஈர்ப்புக் கொண்டவராகவும் அவரது சிந்தனயை஢லும் செயற்பாட்டிலும் அதன் தாக்கத்தைக் காணக்கூடியதாக இருந்தது.
13.11.1938-ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் ஈவெராவுக்கு 'பெரியார்' என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார்கள். பெண்ணினத்தின் விடுதலைக்காக அவரளவு சிந்தித்த சிந்தனையாளர் வேறுயாரும் இருக்க முடியாது. தீவிர பெண்ணியவாதிக்குரிய உத்வேகம் கலகம் அவரிடம் அன்றே இருந்தது. பெண் ஏன் அடிமையானாள்? என்ற அறிவியல் பூர்வமான நூலை 1934ல் எழுதி வெளியிட்டார். 1930ல் சுயமரியாதை இயக்க மாநாட்டுக் துண்டறிக்கையில் தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று அழைக்கப்படுவோர் சிறப்பாக இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று துணிவாக அழைப்புவிடுத்தவர். மேலும் கர்ப்பப் பைகளை எடுக்கச்சொல்லி பெண்களுக்கு அன்றைக்கே அறைகூவல்விடுத்த தீவிர பெண்ணியவாதியாகவும் இருந்துள்ளார்.
1938-ல் ராஜாஜி தலைமையில் நடந்த காங்கிரஸ் அரசு இந்தியை கட்டாய பாடமாக்க அதனை எதிர்த்து பெரியதொரு கிளர்ச்சியினை நடத்தினார்.. கிளர்ச்சியின் இறுதியில் தனிநாடுக் கோரிக்கையும் எழுகிறது. இரண்டாண்டு சிறைத்தண்டனை பெற்று 1939 டிசம்பரில் விடுதலை பெறுகிறார். தொடர்ந்து திராவிடக் கோரிக்கையை வலியுறுத்துகிறார். நீதிக்கட்சியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவரது செல்வாக்கால் சிறிது காலம் நீதிக்கட்சி உயிர்வாழ்கிறது. ஆனாலும் படிப்டியாக நீதிக்கட்சி தனது அடையாளத்தை இழக்கத் தொடங்குகிறது. -ந்நிலையில் 1944-ல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெறுகிறது.
1947 சுதந்திரதினத்தை துக்கநாளாக அனுசரிக்கும்படி ஈவெரா கோருகிறார். ஆனால் -ந்தக் கருத்தில் அண்ணாதுரை உடன்பாடு கொள்ளவில்லை. அவர் சுதந்திரத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டார். 1949ல் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணாவின் தலைமையில் திமுக தோன்றுகிறது. 1950-ல் வகுப்புரிமையை வலியுறுத்தி ஈவேரா இயக்கம் நடத்துகிறார். 1952ல் ராஜாஜி தலைமையிலான ஆட்சி வருகிறது. அப்போது ராஜாஜி அறிமுகப்படுத்திய குலக்கல்வித்திட்டத்தை எதிர்த்து கடுமையான கிளர்ச்சி போராட்டத்தில் ஈடுபடுகிறார். 1954ல் ராஜாஜி பதவி விலக வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகிறது.
1954ல் காமராஜர் முதல்வர் பொறுப்பை ஏற்கிறார். அப்போது ஈவெரா காமராஜருக்கும் காங்கிரசுக்கும் ஆதரவு தருகிறார். 1956ல் மொழிவாரி மாநில உருவாக்கம் நடைபெற்றமையால் தமிழ்நாடே திராவிட நாடு என்கிற நிலைக்குச் செல்கிறார். தொடர்ந்து 1957ல் அரசியல் நிர்ணய சட்டத்தை எரிக்கும் போராட்டம் நடத்தி சிறைச்சென்றார். 1960களில் தமிழ்நாடு தமிழருக்கே என்று அறிவிப்பு செய்கிறார். இந்திய தேசியப்படம் எரிக்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டு மீண்டும் கைதாகிறார். தொடர்ந்து பல்வேறுவகையிலான போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். 1967-ல் காங்கிரஸ் தோல்வி அடைந்து திமுக ஆட்சிக்கு வருகிறது.
பின்னர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார். தொடர்ந்து பல்வேறு கிளர்ச்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு வந்தார். ஆனாலும் ஈவெரா 24.12.1973-ல் மரணமுற்றார்.
ஆக பெரியாரின் ஐம்பது ஆண்டுகால -யக்கத்தின் களம் மிக விரிவானது. அதனூடு வளர்ந்த அவரது சிந்தனைகளும் செயற்பாடுகளும் தமிழகச் சூழலில் பெரும் தாக்கம் செலுத்தியது. பகுத்தறிவு என்கிற ஒளியால் எங்கும் ஒளிப்பாய்ச்ச முற்பட்டார்.
''பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு உண்டு. இதில் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்'' என்று பகுத்தறிவின் தேவையை உணர்ந்து தனது செயற்பாடுகளின் சிந்தனையின் மூலச் சரடாகவும் பகுத்தறிவை ஒவ்வொரு கணமும் பகுத்தறிவின் ஒளி கொண்டும் எதையும் பரிசோதித்து முன்னேறிக் கொண்டிருந்தார்.
பெரியாரது வாழ்வனுபவங்களும் அரசியல் செயற்பாடுகளும் எப்போதும் கலகத்தன்மைக் கொண்டதாகவே உள்ளது. ஆட்சி அதிகாரப் பதவிகளில் அமர்ந்து கொண்டு அயோக்கியவானாக வாழ்வதை அடியோடு வெறுத்தார். அதனால் தான் அவர் கடைசி வரை தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. அனைத்து மூடநம்பிக்கைகளுக்கும் பகுத்தறிவு கொண்ட விளக்கம் கொடுத்தார். விடுதலையின் விரிதளம் நோக்கிய செயற்பாட்டுக்கு எப்போதும் தீவிரமாகவும் துணிவாகவும் உழைக்க வேண்டுமென்பதில் உறதியாகவும் தெளிவாகவும் இருந்தார்.
திராவிட அரசியல் வழிவந்த தலைவர்களுள் பெரியார் அவரது வாழ்வனுபவத்தாலும் சொல்-செயல் இரண்டாலும்கூட மற்றையவர்களில் இருந்து வேறுபட்டவராகவே -ருந்துள்ளார். மொழிப்பற்று, நாட்டுப்பற்று, மதப்பற்று, சாதிப்பற்று ஆகியவற்றை விட்டொழிக்கச் சொல்லும் நபராகவே இருந்துள்ளார். விடுதலைக்கு மிகவும் அவசியமான பற்றாக ஒன்றே ஒன்று மட்டும் குறிப்பிடுகிறார். ''உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானம்தான் உண்மையாய் வேண்டும்'' என்று அவர் குறிப்பிடுவதில் இருந்து அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பது புலப்படும்.
தமிழ்நாட்டு சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஈவெ.ராமசாமி என்ற பெரியாரின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் பின்னோக்கிப் பார்க்கும் போது அவர் எளிதாக எந்தவொரு குறித்த வரையறைக்குள்ளும் சிறைபிடிக்கக்கூடியவர் அல்லர் என்பது நிதர்சனமான உண்மை.

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2006

குறுங்கதை- கடவுளின் கருணை!

குட்டிக் கதை என்றால் அது குழந்தைகளுக்கான கதைகள் என்றும் டெக்காமரான் கதைகளை சொல்ல ஆரம்பித்து அது வேறுமாதிரியான 'குட்டிக் கதைகளாக உறுமாறிப் போனதாலும் இதைக் குறுங்கதை என்று சொல்லியிருக்கிறேன். இவ்வளவு குட்டி கதைக்கு இவ்வளவு நீளமான விளக்கம் தேவையா என்று யோசிக்க வேண்டாம். இனி தொடர்ந்து நான் எழுதப் போகும் எல்லா குட்டிக் கதைகளுக்கும் சேர்த்து இது...

கடவுளின் கருணை!

''கணவன் மனைவிதான் என்று உறுதி செய்துவிட்டீர்களா?'' என்றார் இன்ஸ்பெக்டர்.
''பண்ணிட்டோ ம் சார். ஹஸ்பண்ட் உயிர் இப்பதான் பிரிஞ்சது. சாகறதுக்கு முன்னாடி அவரே சொன்னார்.'' பைக் ஆக்ஸிடண்டில் இறந்தவர்களின் முகத்தைத் திறந்து காட்டியபடியே பதில் சொன்னார் கான்ஸ்டபிள்.லாரி டயருக்கு அடியில் ரத்தம் இன்னும் ஈரம் காயாமல் இருந்தது.
''ஒருத்தர பிரிஞ்சு ஒருத்தர் தவிக்காம ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் செத்துப் போனதும் கடவுளோட கருணைதான்'' ஆகாயத்தைப் பார்த்து நன்றி சொன்னார் இன்ஸ்பெக்டர்.
திடீரென செல்போன் ஒலி. இறந்து கிடந்தவரின் பாக்கெட்டிலிருந்து சப்தம் கேட்டது.
இன்ஸ்பெக்டர் எடுத்தார். ''அரை மணிநேரத்தில வர்றோம்னு சொல்லிட்டு எங்கப்பா போனீங்க? தம்பி இங்க அழுதுகிட்டே இருக்கான்'' என்றது ஒரு சிறுமியின் குரல்.

சனி, ஆகஸ்ட் 12, 2006

பெரியார் படங்கள்


யார் யார், யாரென்று கண்டுபிடியுங்கள்.



பெரியார் படத்தில் பெரியாராக சத்யராஜ் நடிக்கிறார். சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய தலைவரின் வாழ்க்கைப் பதிவு என்பதால் பல அரசியல் தலைவர்களின் உருவ ஒற்றுமையுள்ள நடிகர்களைத் தேடிப் பிடிக்கவேண்டிய நெருக்கடி இயக்குநர் ஞான. ராஜசேகரனுக்கு.
கல்கி, ராஜாஜி, கோவை ராமராதன், நாகம்மை, கண்ணம்மை போன்றவர்களின் வேடங்களுக்கு ஆட்கள் கிடைத்துவிட்டார்கள், அண்ணா வேடத்துக்கு இன்னும் ஆள் கிடைக்கவில்லையாம்.கிடைத்தவரைக்கும் இதோ:-
யார் யார், யாரென்று கண்டுபிடியுங்கள்.

திங்கள், ஆகஸ்ட் 07, 2006

""மூன்று விதமான மனிதர்களின்
வாழ்க்கையை, பெரியார் வாழ்ந்திருக்
கிறார்.
வியாபாரி, காங்கிரஸ்காரர்,
சுயமரியாதை போராளி. இதுதான்
அந்த மூன்று கட்டங்கள். அவருடைய 95
அண்டு கால வாழ்க்கையில் முக்கி
யமான சம்பவங்களைத் தொகுத்து
இரண்டரை மணி நேர சினிமாவுக்குள்
அடக்கு வது மிகப் பெரிய
சவாலாகத்தான் இருக்கிறது.

பெரியாரின் கதை நீண்டதாக இருந்தாலும் «அதற்கு திரைக்கதை
அமைத்து வசனம் ஊழுதுகிற சிரமமான வேலையை எங்களுக்கு பெரியாரே
செய்து கொடுத்து விட்டார்'' என்று பேச ஆரம்பித்தார் "பெரியார்'
இயக்குநர் ஞான.ராஜசேகரன்."

"என்னது, அவருடைய கதைக்கு அவரே திரைக்கதை, வசனம் ஊழுதி
விட்டாரா?'' என்று ஆர்வமானோம்.

சிரித்துவிட்டுத் தொடர்கிறார்.
""தன்னுடைய வாழ்க்கையின் அத்தனை முக்கிய சம்பவங்களையும் அவரே மிக அழகான மொழி நடையில் திரைக்கதை போல எழுதியிருக்கிறார்
என்பதைத்தான் அப்படிச் சொன்னேன். நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை
என்பதற்கு ஒரு உதாரணத்தைச் செல்றேன். பெரியார் காசியிலே சாமியா
ராகச் சுற்றித்திரிந்தார் என்று ஒரு தகவல் கேள்விப்பட்டிருப்பீர்கள். தான்
சாமியார் ஆனதற்கான காரணத்தையும் அவரே விவரித்திருக்கிறார்.

பிராமணர்களுக்கு விருந்து எற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த விருந்தில் உரை எமாற்றிக் கொண்டிருக்கும் நபர்
ஒருவர் கலந்து கொள்ள வந்திருப்பது தெரிகிறது. அவரைக் கையும் க
ளவுமாகப் பிடித்துத் தாக்கினேன். தீட்டுப்பட்டு விட்டதாக பிராமணர்கள்
சாப்பிடாமல் சென்றுவிட்டனர். விஷயம் என் தந்தை வெங்கட நாயக்கரிடம் செல்கிறது. அந்த அன்னதானத்தை
எற்பாடு செய்தவரே அவர்தான். ஒன்றும் நடக்காதது போல் நேராக மண்டிக்கு வந்து அமர்ந்திருந்த என்னிடம்
விசாரித்தார்.."ஒ.சி. சாப்பாடு சாப்பிட வந்தவர்கள்
தானே? சாப்பிடாமல் போனால் என்ன?' என்றேன். அவருக்குக் கோபம் வந்து விட்டது. செருப்பைக் கழற்றி 7 அல்லது 8 அடி
அடித்தார்'
என்று விவரித்திருந்தார் பெரியார்.

அந்தக் கோபத்தில் காசியில் சுற்றித் திரிந்துவிட்டு ஆந்திராவில் தந்தையின்
நண்பர் எலூர் சுப்ரமணியம் என்பவரின் வீட்டில் வந்து தங்கியிருந்த போது
அவருடைய தந்தை அங்கு அவரைத் தேடி வந்ததைப் பற்றி எழுதுகிறார்.

மகனைப் பிரிந்த வேதனையில் அவர் தேடாத ஆடமில்லை. பிள்ளையை பறி
கொடுத்து விட்டோம் என்ற முடிவுக்கே வந்து விடுகிறார். ஆனால் பிள்ளையைப் அந்தத் தவக்கோலத்தில் பார்த்ததும்
அவருக்கு சிரிப்பு வந்தது. பதிலுக்கு தானும் சிரித்ததாக எழுதியிருக்கி
றார். பிறகு "செருப்பால் அடிச்சதாலதானே ஒடி வந்துட்ட? நாங்கள்
விசாரிக்காத ட்ராமா கம்பெனி இல்ல, தாசிவீடு இல்லை' என்று அழ
ஆரம்பிக்கிறார் தந்தை.
ஆக, படம் எடுப்பதற்கு அதன் ஹீரோவே எங்களுக்கு முழு ஸ்கிரிப்டையும் டயலாக்கோடு தந்திருக்கிறார். ஆதுதான் என்னைப் படமெடுக்கத் தூண்டியது -
இயக்குகிறது' என்று பரவசப்படுகிறார் ராஜசேகரன்.

அனால் ஆந்தக் காட்சியைப் படமெடுப்பதற்குப் பட்டபாடு இன்னொரு
சுவாரஸ்யம்.""இந்தக் காட்சியில் பெரியாராக
சத்யராஜும், தந்தை வெங்கட நாயக்கராக தெலுங்கின் முன்னணி
நடிகர் சத்யநாராயணாவும் நடித்தார்கள்.இருவருமே அந்தக் கேரக்டரை
உள்வாங்கிக் கொண்டு, பிரிந்தவர் கூடிய நெகிழ்ச்சியில் உணர்ச்சி
வசப்பட்டு அழுகிறார்களே தவிர, பெரியார் வர்ணித்ததுபோல சிரித்துக்
கொள்ள முடியவில்லை.

"இந்தக் காட்சியில் என்னால் சிரிக்க முடியவில்லை. மன்னித்துவிடுங்கள்'
என்கிறார் சத்யநாராயணா. காரணம், அவர் பெரியாரின்
தந்தையாகவே மாறிவிட்டார். வேறுவழியில்லாமல் சிரித்துக் கொள்வது
போல் இல்லாமல் கண்கலங்கிப் போவதை மட்டுமே படம் பிடித்தோம்''
என்று கூறி விட்டு, படத்தில் ""நகைச்சுவைக் காட்சிகளுக்கும் பஞ்சம்
இருக்காது. பெரியார் எவ்வளவு சீரியசான மனிதரோ, அந்த அளவுக்கு
நகைச்சுவை உணர்வும் மிக்கவராக இருந்தார்'' என்றார்.
பெரியார் வீட்டைவிட்டுப் போகும்போது அணிந்திருந்த அத்தனை நகைகளையும் தந்தையிடம் திருப்பிக் கொடுக்கிறார். "எல்லா நகையும் அப்படியே இருக்கே... எப்படி சாப்பிட்டே இவ்வளவு நாளா?'
என்று கேட்கிறார் தந்தை. மகன் அளிக்கும் பதில்: "நீங்களும்,
அம்மாவும் இரோட்டில் செய்த அன்னதானம் அத்தனையையும் வட்டியும்
முதலுமா வசூல் செஞ்சுட்டேன்.''"

"பெரியார் பெரிய சிந்தனையாளராக இருந்தார். ரஸ்ஸல் சொன்னார்,
இங்கர்சால் சொன்னார், வள்ளுவர் சொன்னார் போன்ற மேற்கோள்களைப்
பயன்படுத்தாமல் ஒவ்வொரு பிரச்சினையிலும் தான் எற்படுத்திக்
கொண்ட அபிப்ராயங்களையே சிந்தனைகளாகச் சொல்-வந்தார்.மகாத்மா காந்தியிடம் அவர் வர்ணாசிரம கொள்கை எதிர்ப்பு
காரணமாகத்தான் பிரிகிறார். படத்தில் முக்கியமான காட்சி இது.அவருடைய நண்பர் ராமநாதனுடன் மாட்டு வண்டியில் போய்க்
கொண்டிருக்கிறார்.

காந்திஜி, வர்ணாசிரமத்தை ஆதரிச்சுப் பேசியிருக்காரே...? பேப்பரைப் பார்த்
தீங்களா...? என்கிறார் ராமநாதன்.""படிங்க... கேட்கலாம்'' என்கிறார்
பெரியார். ராமநாதன் பேப்பரைப் படிக்கிறார்.""ஒவ்வொரு குலத்தார்களும்
அவர்களுக்கான தொழிலைச் சரிவரச் செய்தாலே அவர்கள் உயர்ந்தவர் அ
கிறார்கள். இதில் உயர்வு, தாழ்வு எங்கிருந்து வருகிறது?''

பெரியார் வண்டியை நிறுத்தச் சொல்- அங்கே போய்க்கொண்டிருக்கும்
சிறுவனை அழைக்கிறார்.அவனிடம் "தம்பி எனக்கு ஒரு
சந்தேகம். ஒழுங்கா செருப்பு தைக்கிறவன், ஒழுங்கா க்ஷவரம் செய்றவன்,
ஒழுங்கா மந்திரம் சொல்றவன் ஊல்லாம் ஒண்ணா?' என்று கேட்கிறார்.""தாத்தா ஈனக்கு மூளை கெட்டுப்
போச்சா? மந்திரம் சொல்றவங்க ஒசத்தி. க்ஷவரம் பண்றவர் அவருக்குக்
கீழே, செருப்பு தைக்கிறவர் அதற்குக் கீழே'' என்கிறான் சிறுவன்.உடனே பெரியார் பெங்களூரில் தங்கி இருந்த காந்திஜியை சந்திக்கிறார்.

"நீங்க உயர்ந்த எண்ணத்தில் சொல்றீங்க. ஆனா ரோட்டில் நடக்கிற
சின்னப் பையன் கூட இதை நம்பமாட்டான்' என்கிறார்.பெரியார் தன் ஆசைகளை தத்துவங்களாகச் சொன்னதில்லை.
நாட்டு நடப்பைத்தான் தன் சிந்தனையாகச் சொன்னார் என்பதற்கு ஆது
ஐரு உதாரணம்.

காந்திஜி, பெரியார் பேச்சு தொடர்கிறது. "உயர்ஜாதியில் ஒரு நல்லவர் கூடவா இல்லை?' என்கிறார் காந்தி."எனக்குத் தெரியலை' என்கிறார்
பெரியார்."என் கோபால கிருஷ்ணகோகலே
இல்லையா?' என்கிறார்.
"தங்களைப் போன்ற மகாத்மாவுக்கே ஒருத்தர் தான் நல்லவரா தெரிகி
றார்...' என்று பதில் தருகிறார்.காந்திஜிக்கு பெரியார் கருத்தில்
சம்மதமில்லை. "நாம் எல்லாம் சேர்ந்து நம் சமுகத்தில்
இருக்கும் குறைகளை நீக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது' என்கிறார்.
"மதத்தை வைத்துக் கொண்டு நிரந்தர சீர்திருத்தம் எதையும் செய்துவிட
முடியாது. அப்படி ஐரு சீர்திருத்தம் செய்ய நினைத்து அது மேல்சாதி
க்காரர்களின் நலனுக்கே எதிராக அமைந்தால் அவர்கள் உங்களை
உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள்' என்கிறார்.

1948-ல் காந்திஜிக்கு அதுதான் நடந்தது''என்றார் ஆயக்குநர்
ஞான.ராஜசேகரன்.
ராஜசேகரன் "பாரதி' படத்தைப் போல பலமடங்கு ஆதாரங்களுடன் படத்தை
உருவாக்கி வருவது அவருடைய பேச்சில் தெரிந்தது.-பர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில் ருவாகி வரும் இப்படத்துக்கு தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்கிறார்.
லெனின் எடிட்டிங் செய்கிறார்.
வித்யாசாகர் இசைக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். கலையை
ஜே.கே.வும், ஆடை வடிவமைப்பை சகுந்தலா ராஜசேகரனும் செய்கி
றார்கள்.இடுபாடும், திறமையும் உள்ள கலைஞர்களின் கூட்டணியில் வளர்ந்து வருகிறார் பெரியார்.

காரைக்குடியில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
அடுத்து இரோட்டிலும் காசியிலும் படப்பிடிப்பைத் தொடர்கிறார்கள்."நிழல்கள்' ரவி கோவை அய்யாமுத்துவாகவும், இயக்குநர்
ஆர்த்தி குமார் ராஜாஜியாகவும், ஊல்.ஏ.சி. நரசிம்மன் திரு.வி.க.வாகவும்
சந்திரசேகர் ராமநாதனாகவும் நாகம்மையாக ஜோதிர் மயி, தங்கை
கண்ணம்மையாக லாவண்யா, தாயாராக மனோரமாவும் நடிக்கி
றார்கள். காந்திஜியாக கேரளாவைக் சேர்ந்த ஜார்ஜ்பால் நடிக்கிறார்.பெரியாருக்கு சினிமா பிடிக்காது,
ஆனால் "பெரியாரை' சினிமாவுக்குப் பிடித்துவிட்டது தெரிகிறது.
- தமிழ்மகன்

காரைக்குடியில் பெரியார்


காரைக்குடியில் படுவேகமாக வளர்ந்து வருகிறார் "பெரியார்'. முதல் கட்டப் படப்பிடிப்பாக அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறுகிறது.பெரியாரின் 25 வயது முதல் 95 வயது வரையிலான வயது பருவத்தில் சத்யராஜ் நடிக்கிறார். அதுபற்றி சத்யராஜிடம் கேட்டபோது, ""பெரியாராக நடிக்க பொருத்தமான வயது இப்போது எனக்கு. ஆப்போது 52 வயது அகிறது. இப்போதும் நான் ஹீரோ வேடம் போடுவதை மக்கள் எற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் 25-30 வயது பெரியராக அரம்பித்து 95 வயது வரை பயணிக்க அதுதான் பொருத்தமான வயது என்று சொன்னேன்.பெரியாரின் மீது இருந்த இடுபாடு அந்த பொருத்தத்தை அதிகப்படுத்துகிறது. அதற்காக பெரியாரின் வீடியோ கிளிப்பிங்ஸ் சிலவற்றைப் பார்த்தேன். அவர் சொற்பொழிவின் அடியோ கேசட்டுகளையும் போட்டுப் பார்த்தேன். சற்றே வயதான ரகுவரனின் குரல் போல யூகிக்க முடிகிறது'' (வசனம் ஐன்றை பேசிக் காட்டுகிறார்). ஒரு பிஸினஸ்மேனாக சேர்மன் பதவியில் இருந்தபோது இருந்த கெட்டப், காசியில் சாமியாராக மொட்டை அடித்து காவி உடுத்தியிருந்த கெட்டப், பிறகு காங்கிரஸ்காரராக, திராவிட சிந்தனையாளராக பல் வேறு பரிமாணங்களில் அவர் எப்படி தன்னையே புடம் போட்டு வளர்த்துக் கொண்டார் என்பதை அதற்கான சம்பவங்களோடு படமாக்கி வருகிறார் இயக்குநர் ஞான.ராஜசேகரன்."பாரதி' வேடத்துக்கு இந்திப் பட வில்லன் நடிகரான சாயாஜி ஷின்டேவைக் கண்டெடுத்தது போல, "பெரியார்' படத்துக்காகவும் அதில் வரும் வரலாற்றுத் தலைவர் பாத்திரங்களுக்கான நடிகர்களை வெவ்வேறு மூலங்களில் இருந்து கண்டெடுத்திருக்கிறார்கள். திரு.வி.க.வாக எல்.ஐ.சி. நரசிம்மன், கோவை அய்யாமுத்துவாக "நிழல்கள்' ரவி, ராமநாதனாக சந்திரசேகர் நடிக்கிறார்கள். ராஜாஜியாக நடிப்பவர் சத்யராஜ் நடித்த "சவுண்ட் பார்ட்டி'யை இயக்கிய ஆர்த்திகுமார். தாடியும், நீண்ட தலைமுடியுமாக இருந்த அவருக்குள் ஒரு ராஜாஜியை கண்டு பிடித்தது சத்யராஜ்தான்! காந்திஜி வேடத்தில் கேரளத்தைச் சேர்ந்த மேடை நடிகர் ஜார்ஜ் பால் நடிக்கிறார். நாகம்மையாக ஜோதிர்மயி நடிக்க பெரியாரின் தங்கை கண்ணம்மையாக லாவண்யா நடிக்கிறார். பெரியாரின் பெற்றோர்களாக இ.வி.வி.சத்ய நாராயண - மனோரமா நடிக்கிறார்கள். காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேடி வருகிறார்கள். மின்விளக்குகள் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒளிப்பதிவை தங்கர்பச்சானும், காலத்தைத் தன் கலைநுட்பத்தால் காக்கும் பணியை அர்ட் டைரக்டர் ஜெ.கே.வும் செய்து வருகிறார்கள். படத்தில் அரசியல் சிந்தனைகளையும், சமூக சிந்தனைகளையும் வலுவாக சொல்லயிருப்பது போலவே சிலவற்றை வேடிக்கையாகவும் சொல்லியிருக்கிறார்கள். பெரியார் - நாகம்மை திருமணம் நடக்கிறது. புது மணப் பெண்ணிடம் தாலியை கழற்றி விடுமாறு கூறுகிறார் பெரியார். "தாலி புருஷனுக்கு சமம். நான் கழற்ற மாட்டேன்' என்கிறார் நாகம்மை. ""அதனால தான் கழற்றச் சொல்கிறேன். புருஷன்கூட இருக்கும்போது தாலி போட்டுக்கிட்டு இருந்தா ரெண்டு புருஷன்னு கணக்காகிடும். புருஷன் வெளியூர் போயிருக்கும் போது தாலி கட்டி யிருந்தா போதும்'' என்ற லாஜிக்கை சொல்லி நாகம்மையை நம்ப வைத்து விடுகிறார் பெரியார். மறுநாள் மாமியார் தாலி இல்லாததைப் பார்த்து மருமகளிடம் கேட்கிறார். நாகம்மை நடந்ததை விவரிக்கிறார். பெரியாரின் சேட்டை புரிகிறது இருவருக்கும். இப்படி இருந்த நாகம்மை பெரியாருடன் கள்ளுக்கடை மறியலில் இடுபட்டு பெரும் போராளியாக மாறுகிறார். பிரிட்டீஷ் அரசாங்கம், காந்திஜியை சந்தித்து கள்ளுக்கடை ஒழிப்பால் அரசு வரிப் பணம் இல்லாமல் தத்தளிப்பதாக முறையிடுகிறது. காந்திஜி சொல்கிறார்: ""கள்ளுக் கடை மறியலை நிறுத்துவது இப்போது என் கையில் இல்லை. தமிழ் நாட்டில் இருக்கும் நாகம்மை நினைத்தால்தான் முடியும்'' என்கிறார். இப்படியான எகப்பட்ட சம்பவக் கோர்வையாக உருவாகி வருகிறது "பெரியார்' படம்."பெரியார்' 21-ம் நூற்றாண்டிலும் தன் பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருக்கிறார், இந்த முறை சினிமா மூலமாக.

-தமிழ்மகன்

வெள்ளி, ஆகஸ்ட் 04, 2006

I am not suffering from any disease- Simran

She is in love with Raju Sundaram.She breaks away with Raju Sundaram.Raju - Simran in love despite pressures from their families.Simran is getting married.End of Raju - Simran relationship.Simran is drunk and misbehaves in the airport.Simran dismissed her manager.Confusions galore in Simran’s call sheets.Blue film starring Simran.Simran is afflicted with AIDS.
These are some of the cine headlines that appeared within a period of last three months. May be in the last 70 years of the history of Tamil cinema no other actress than Simran would have got embroiled in the rumour mill running around Kollywood. And finally Simran thought that she has had enough of it and called for a press meet last Sunday. No doubt she tried to remain calm and answer all the questions patiently. But she could not control her emotions completely. She smiled now and then and was angry many a time. However, she tried to remain and appear calm and collected. Here are the questions put to her and her answers to them.
Are you in love with Raju Sundaram?When I get married I will certainly announce it well ahead of the date. It is only you, the press people, who have conducted my marriage several times in the past even before I got the scent of it.
Are you in love with Raju Sundaram or not?Whoever be I am in love with. I will get married only after telling you all and inviting you all.
Is there any truth at all in the news items that appeared that you are in love with Raju Sundaram, or are they utter falsehood?Yes. It is true that I am in love with him
When are you getting married?It has not yet been decided.
But, only you have been speaking about being in love with Raju. He is not opening his mouth on this…Only he has to answer this question.
It is said that his mother has put a condition that you should not act in movies after the marriage and also that your mother has not agreed to this….Nothing to this effect has happened.
Have your parents and Raju’s parents spoken among themselves about your marriage?No. My mother and his mother have not met as yet.
When the entire Tamil film industry participated in the funeral of Sivaji, you were missing. Why was it you were missing?When I came to know of his death, I was in Hyderabad in a shooting. The circumstances did not permit the cancellation of the shooting immediately, to enable me to attend his funeral. And when I returned to Chennai, the funeral ceremonies were over by that time.
It was not only you. No actress from Mumbai in general, participated in the funeral.I do not about others. I respect him very much. I have acted in the film ‘Once more’ with him and I am proud of it. Please understand my situation. I could not attend the funeral because I was in a film shooting which could not be cancelled. This becomes an issue only if I was in Chennai and did not attend.
There have been scores of negative information about you for the past three months. What do you wish to say about them?That I am in love with Raju is an old news. But I was very much affected by the one that said that I am afflicted with some disease. Just think of it. How will you all be affected if your own sister or wife is rumoured about in this manner? I am not suffering from any disease and I did not undergo treatment for anything whatsoever.
Then what could be the reason for the rumour mill to run so? Do you think that this may be the handiwork of managers who were working for you till recently?May be. I am led to believe that. See, I appoint a manager only to look after my call sheet and receivables. I sent them out because they did not perform it properly. May be they were provoked by that and are spreading such rumours. But it would have been better if the press people checked them with me before publishing them.
But you are not accessible for us to do any verification…I have taken necessary action to see that it doesn’t happen any more. Please check such items with me before publication.
The role you have played in 12B has neither been considerable nor impressive…That was the role given to me in the movie.
There was an announcement that you are acting in ‘Three Roses’. But later you were not in the movie. What happened?I did not like the story. They are basing the movie on the English film, ‘Charlie Angel’. In the first instance, I was not impressed with the English movie itself. That’s the only reason for my not acting in ‘Three Roses’.
Are you playing the role of a liberation tiger in ‘Kannathil Muthamittal’, directed and produced by Mani Ratnam?No I am not. I am playing the role of a TV newsreader. Nandita Das is playing that role.
What are the other movies in which you are acting now?‘I Love You daa.’ This is a movie about cricket match fixing. Then, ‘Paarthaale Paravasam’ by K. Balachander, Pammal K. Sambandham with Kamal, ‘Tamil’ with Prashanth, ‘Udhaya’ with Vijay, and another with Mohanlal - a Nassar movie.
Rehman is scoring music for ‘Kannathil Muthamittal’, ‘Paarthaale Paravasam’ and ‘Udhaya’. The delay is due to the time that the music director takes. And then naturally some dates get postponed. In effect, it is Simran who becomes responsible for any delay and is blamed of bounced call sheets.
am acting in Telugu with Chiranjeevi, in ‘Daddy’ and another with Balakrishna. I am acting in the Hindi remake of ‘Thulladha manaum thullum’. Apart from all this, I will be doing an English movie directed by Dura Savar. It is about the deva dasis who lived in 1930s. The film will be shot in Thanjavur.
What is the problem with your sister Monal? You are living in separate houses…There is absolutely no problem. She is living alone because she wants to. It is her liking. There is no problem in our family. Me, my sisters (apart from Monal there is another sister by name Jothi, who will soon make her entry into filmdom) and my brother Sumith are all amiable, loving and affectionate.
Simran finished the press meet and started for her shooting in New Zealand. (Of course, she did not pick up any quarrel in the airport!) She conveyed her best wishes for Deepavali to all her fans.
(2000)
--TamilmaganTr. By Hari Krishnan

LinkWithin

Blog Widget by LinkWithin