திங்கள், டிசம்பர் 10, 2007

25 ஆயிரம் மாணவர்கள்... ஒரு டிஸ்க் ஜாக்கி!







குதிரை ரேஸில் மட்டுமே கேள்விபட்டிருந்த ஜாக்கிகள் இப்போது பல்வேறு துறைகளிலும் அடிபட ஆரம்பித்திருக்கிறார்கள். ரேடியோ ஜாக்கிகள், விடியோ ஜாக்கிகளைத் தொடர்ந்து இப்போது உலகமெங்கும் பிரபலமாகி வருவது டிஸ்க் ஜாக்கிகள்...

கல்யாண விழாக்கள், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தொடங்கி கார்பரேட் கொண்டாட்ட களேபரங்கள் வரை வந்திருப்பவர்களை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் மகிழ்விப்பதற்கு உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கலாசாரம்தான் டிஸ்க் ஜாக்கி உலகம். பிரபலமான சினிமா பாடல்களைச் சுடச்சுட ரீமிக்ஸ் செய்து பாடி, ஆடி என்டெர்டெய்ன் செய்பவர்கள் டிஸ்க் ஜாக்கிகள். பார்ட்டி அரங்குகளில் இவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் வட்டமேடை (?) டிஸ்க் என்று அழைக்கப்படுகிறது. சரி.. ஜூட். சர்வ தேச அளவில் புகழ் பெற்று இருக்கும் டிஜே'வான நாஷா சமீபத்தில் நேச்சுரல் நிறுவனத்தின் புதிய கிளையின் திறப்புவிழாவுக்காக மும்பையிலிருந்து சென்னை வந்திருந்தார். அவர் நமக்களித்த பேட்டிக்குப் போவோமா?


உங்களுக்கு டிஜே லட்சியம் ஏற்பட்டது பற்றி சிறுகுறிப்பு?

இயற்பெயர் ரித்தேஷ் டி'úஸôசா. அப்பா, அம்மாவுக்கு இசையில் அதீத ஆர்வம் இருந்தது. நான் ஒரு ராக் ஸ்டார் ஆக வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் டி.ஜே.வில்தான் சாதிக்க வேண்டும் என்று எனக்கு எழுதியிருக்கிறது. 1999-ல் முதல் அரங்கேற்றம். தொடர்ந்து உலகம் முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாகிவிட்டது. எம்.டி.வி.யின் மிக நீண்ட நடன நிகழ்ச்சிக்காகப் பாடி கின்னஸ் சாதனையும் செய்தாகிவிட்டது.





உங்கள் நிகழ்ச்சியின் அரிய சந்தர்ப்பங்கள் என்று எதை நினைக்கிறீர்கள்?

ஜாகீர் ஹுசைன், யூ.ஸ்ரீனிவாஸ், செல்வகணேஷ், சிவமணி, ரஞ்சித் பரோட் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றிய நேரங்களை என்னால் மறக்கவே முடியாது.

பொழுதுபோக்குவதற்காக

உங்களை அழைக்கிறார்கள். ஏதாவது சந்தர்ப்பத்தில் அலுப்பு ஏற்பட்டு மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்ட சம்பவம் நடந்திருக்கிறதா?

அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. டி.ஜே.வின் அடிப்படை அம்சமே உற்சாகம்தான். நாங்கள் கலந்து கொள்ளும் விழா எத்தகையது என்பதை முன்னரே தெரிந்து கொள்வதால் அதற்கான தயாரிப்புகளோடு இருப்போம். உதாரணத்துக்கு புனேவில் 25 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட இண்டர் காலேஜ் நிகழ்ச்சி. மாணவர்களைக் கட்டுக் கோப்பில் வைத்திருப்பது சாதாரண விஷயமா? ஆனால் நான் நடத்திய நிகழ்ச்சிகளிலேயே மிக சிறப்பாக அமைந்த நிகழ்ச்சி அதுதான்.

டிஜே'வுக்கு விடப்பட்ட சவாலே அந்த நிமிடத்தில் மகிழ்ச்சிப்படுத்துவதுதான்.

இந்த விஷயத்தில் உங்களுக்குக் குரு யார்?

குரு என்று சொல்ல முடியாது. ஆனால் என் ஃபேவரைட் ஆசாமி இங்கிலாந்தைச்

சேர்ந்த "டிஜே' ஸ்க்வீன்.


வேறு இசை முயற்சிகள்?

இந்திப் படங்களுக்கு ரீமிக்ஸ் செய்ய அழைக்கிறார்கள். படங்களுக்குச் செய்வதை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆன் தி ஸ்பாட் ரீமிக்ஸில்தான் த்ரில். "முட்ஷே சாதிக்கரோ' படத்துக்கு ஒரு ரீமிக்ஸ் செய்திருக்கிறேன். டிஜே அகாடமி ஒன்று துவங்கியிருக்கிறேன். ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து சேர்கிறார்கள். இது ஒரு மகிழ்ச்சியூட்டும் முயற்சி என்ற விதத்தில் என் வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

தமிழ்மகன்

படங்கள்:மீனம் மனோ

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin