புதன், டிசம்பர் 05, 2007

இம்போர்ட்டட் சரக்கு!:

பாவத்தின் விளைவு



உபதேசங்களை வாரி வழங்கினார் ஒரு சாமியார். பயபக்தியாய் தினமும் கேட்டுவந்தான் ஒரு சீடன். ஒருமுறை சாமியாரிடம், ""நமக்கு கடவுள்தான் எல்லாம். கடவுளை எப்போதும் நம்பு. அவர் எப்போதும் உன்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னீர்களே... நேற்றடித்த பெரும்புயலில் என் குடிசை விழுந்துவிட்டது'' என்று கோபமாகச் சொன்னான் சீடன்.

""அது நீ செய்த பாவத்தின் விளைவு'' என்றார் சாமியார்.

""உங்கக் குடிசையும்தான் விழுந்துவிட்டது. அது உங்கள் பாவத்தின் விளைவா?'' திரும்பக் கேட்டான் சீடன்.

புன்னகை மாறாமல் சீடனை ஆசிர்வதித்தபடியே சொன்னார்: ""நல்லவர்களையும் கடவுள் சோதிப்பதுண்டு.''







மனம் எனும் பூதம்!



மார்ட்டின் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். நடுக்கடலில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு சுறாமீன் அவனது படகை முட்டித் தள்ளியது. படகு 10 அடி உயரத்துக்குப் பறந்தது. கீழே விழுந்து கொண்டிருந்தபோது ""கடவுளே காப்பாற்று'' என்றான் அனிச்சையாய். உடனே அவன் அந்தரத்தில் அப்படியே உறைந்தபடி இருந்தான். கடவுள் அவன் முன் தோன்றினார். ""உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.

எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்தது மாதிரி சுறாமீனுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டால் அது தன்னைக் கொல்லாதென்று நினைத்தான் மார்ட்டின். ""சுறாவுக்கும் கடவுள் நம்பிக்கை தா'' என்றான்.

""சரி'' என்றார் கடவுள்.

அடுத்த வினாடி சுறா, ""கடவுளே எனக்கு இரை தந்ததற்கு நன்றி'' என்றது. மார்ட்டின் சுறாவின் வயிற்றுக்குள் சென்றான்.

இம்போர்ட்டட் சரக்கு: நியாயமான பயம்!



டாக்ஸியில் உட்கார்ந்திருந்த மில்டன் டிரைவரிடம் ஏதோ சந்தேகம் கேட்கும் நோக்கத்தில் அவன் தோளைத் தட்டி அழைத்தான். அவ்வளவுதான். டிரைவர் மிரண்டு போய் ப்ளாட்பார்ம் மீதும் மரங்களை உராய்ந்தும் தாறுமாறாய் காரை ஓட்டி காரை தடாலென நிறுத்தினான்.

""என்ன மிஸ்டர்... சும்மா இப்படி கூப்பிட்டதற்கு இவ்வளவு பயந்துட்டீங்களே?'' என்றான் மில்டன்.

""இது உங்கள் தவறு இல்லை. நான் இதுவரைக்கும் சவ வண்டிக்குத்தான் டிரைவராக இருந்தேன். எனக்குப் பின்னால் பிணத்தைத் தவிர வேறு எதுவும் இருந்ததில்லை. அதனால்தான்'' என்றான் டிரைவர்.





இம்போர்ட்டட் சரக்கு: கண்டுபிடிச்சேன்... கண்டுபிடிச்சேன்...

மனநல காப்பகத்தில் தம் உறவினரைப் பார்ப்பதற்காக வந்திருந்தான் அவன். தலைமை மருத்துவரைப் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள்? என்று விசாரித்தான்.

தலைமை மருத்துவர் விவரித்தார். எளிய சோதனை மூலம் கண்டுபிடிப்போம். இந்த பாத் டப்பில் நீரை நிரப்புவோம். பிறகு ஒரு ஸ்பூன், ஒரு டீ கப், ஒரு பக்கெட் மூன்றையும் அருகில் வைத்து விடுவோம். பாத் டப்பில் உள்ள நீரை அகற்றச் சொல்வோம்.

கேள்வி கேட்டவன், ""புரிந்து விட்டது. பக்கெட் மூலம் நீரை வேகமாக அப்புறப்படுத்துபவன் மனநலம் பாதிக்கப்படாதவன் அப்படித்தானே?''

""இல்லை. நார்மல் ஆசாமியாக இருந்தால் பாத் டப்பில் கீழே இருக்கும் ப்ளக்கை அகற்றி நீரை அப்புறப்படுத்துவான். ...ஓ.கே. உங்களுக்கு அந்த ஜன்னலோர படுக்கை போதுமா பாருங்கள்!''

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin