புதன், டிசம்பர் 05, 2007

இம்போர்ட்டட் சரக்கு:

மகிழ்ச்சியின் நிறம் எது?

அந்த சர்ச் களை கட்டியிருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடு. மணமகளும் மணமகனும் திருமண ஆடையில் மகிழ்ந்திருந்தனர்.

திருமணத்துக்கு வந்திருந்த பீட்டர் தன் அம்மாவிடம் கேட்டான்:

மணமகள் எதற்கு வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்?

சற்றே யோசித்த அம்மா, ""மகிழ்ச்சியின் நிறம் வெண்மை. இது அவளுடைய மகிழ்ச்சியான நாள். அதனால் வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்'' என்றார்.

பீட்டர் கொஞ்ச நேரம் மணமகளைக் குழப்பமாகப் பார்த்துவிட்டு மீண்டும் கேட்டான்:

""அப்படியானால் மணமகன் கருப்பு கோட் அணிந்திருக்கிறாரே அது?''












ஜெயித்தது எப்படி?

விக்டருக்கு அது முதல் வழக்கு. எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்று தீவிரமாக வாதாடினான். ஆனால் சாட்சியங்கள் சரியாக இல்லை. எப்படியும் தீர்ப்பு தம் கட்சிக்காரருக்குச் சாதகமாக இருக்காது என்று தெரிந்து விட்டது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். தம் கட்சிக்காரரை அழைத்து ""நான் நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பதற்கு முடிவு செய்துவிட்டேன்'' என்றான் விக்டர்.

""அடப்பாவி... அவர் மிகவும் நேர்மையான நீதிபதி. வேறு வினையே வேண்டாம்'' என்று பதறினான் அந்த பிசினஸ்மேன். விக்டரோ லஞ்சம் கொடுப்பதில் தீவிரமாக இருந்தான்.

இரண்டாம் நாள் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. பிசினஸ்மேன் விடுதலை ஆனான். பிசினஸ்மேன் ""எப்படி?'' என்றான்.

""நான் வெகுமதி அனுப்பி வைத்தது உண்மைதான். ஆனால் அத்துடன் எதிர்க்கட்சி வக்கீலின் விசிட்டிங் கார்டை அல்லவா இணைத்து அனுப்பினேன்?'' தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னான் விக்டர்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin