செவிச் "செல்வம்'
அவர் பெரிய செல்வந்தர். நெடுங்காலமாகக் காது கேட்காமல் அவதிபட்டு வந்தார். காது மிஷின் மாட்டிக் கொள்வதில் சின்ன தயக்கம் இருந்ததே அதற்குக் காரணம்.
ஒரு கட்டத்தில் வேறு வழியில்லை என டாக்டரை அணுகினார். அவரும் வெளியே யாருக்கும் தெரியாதபடியான மிகச் சிறிய காது மிஷின் வந்திருப்பதைத் தெரிவித்து அதையே பொருத்தினார்.
ஒரு மாதம் கழித்து டாக்டரிடம் வந்தார் செல்வந்தர். ""இந்தக் காது எந்திரம் மிகப் பிரமாதமாக வேலை செய்கிறது. வாழ்த்துகள்'' என்றார்.
உங்கள் வீட்டில் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்களே?'' என்றார் டாக்டர்.
செல்வந்தர் வெறுப்பாகப் பதில் சொன்னார்: ""இதுவரை வீட்டில் எனக்குக் காது கேட்கிற விஷயத்தைச் சொல்லவில்லை. இந்த ஒரு மாதத்திலேயே மூன்று முறை உயிலை மாற்றி எழுதும்படி ஆகிவிட்டது.''
இம்போர்ட்டட் சரக்கு: மகிழ்ச்சியின் நிறம் எது?
அந்த சர்ச் களை கட்டியிருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடு. மணமகளும் மணமகனும் திருமண ஆடையில் மகிழ்ந்திருந்தனர்.
திருமணத்துக்கு வந்திருந்த பீட்டர் தன் அம்மாவிடம் கேட்டான்:
மணமகள் எதற்கு வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்?
சற்றே யோசித்த அம்மா, ""மகிழ்ச்சியின் நிறம் வெண்மை. இது அவளுடைய மகிழ்ச்சியான நாள். அதனால் வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்'' என்றார்.
பீட்டர் கொஞ்ச நேரம் மணமகளைக் குழப்பமாகப் பார்த்துவிட்டு மீண்டும் கேட்டான்:
""அப்படியானால் மணமகன் கருப்பு கோட் அணிந்திருக்கிறாரே அது?''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக