வேலை நேரம்!
ஜானுக்கு சாலையின் நடுவே வெள்ளைப் பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்தது. முதல் நாள் ஆறு மைல் தூரம் வெள்ளைக் கோடு போட்டார். இரண்டாவது நாள் மூன்று மைல் தூரம் கோடு போட்டார். அடுத்த நாள் ஒரு மைல் தூரம்தான் போட முடிந்தது. சூப்ரவைஸர் கூப்பிட்டுக் கேட்டார்.
""ஏன் இப்படிக் குறைந்து கொண்டே போகிறது?''
""எப்போதும்போல் வேகமாகத்தான் அடிக்கிறேன். பெயிண்ட் கேன், முதல்நாள் அடிச்ச இடத்திலே இருந்தால் திரும்பத் திரும்ப தொட்டுக்கிட்டுத்தான வரணும்?''
எத்தனைக் காகங்கள்?
ஒருநாள் மாலை அக்பர், பீர்பால் மற்றும் அமைச்சரவைச் சகாக்கள் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது வானில் ஏராளமான காகங்கள் பறந்தன.
அக்பருக்கு திடீரென ஒரு சந்தேகம். ""நம் ராஜ்ஜியத்தில் எத்தனைக் காகங்கள் இருக்கும் என்று இங்கு யாராவது சரியாகச் சொல்ல முடியுமா?'' என்று கேட்டார்.
சட்டெனச் சொன்னார் பீர்பால்.
""18 ஆயிரத்து முன்னூற்று அறுபத்து மூன்று''
பீர்பால் இப்படிக் குருட்டாம் போக்கில் பதில் சொல்வது அக்பருக்குப் பிடிக்கவில்லை.
""ஒருவேளை அதிகமாக இருந்தால்?''
""நமது ராஜ்ஜியத்துக்குப் புதிதாக வந்த விருந்தினராக இருக்கும்''
பீர்பாலின் சமாளிப்பு புரிந்தது.
""சரி.. ஒரு வேளை குறைவாக இருந்தால்?''
""உங்கள் புகழ் பரப்ப பக்கத்து ராஜ்ஜியத்துக்குச் சென்றிருக்கும்''
பீர்பாலின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார் அக்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக