ஜெயித்தது எப்படி?
விக்டருக்கு அது முதல் வழக்கு. எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்று தீவிரமாக வாதாடினான். ஆனால் சாட்சியங்கள் சரியாக இல்லை. எப்படியும் தீர்ப்பு தம் கட்சிக்காரருக்குச் சாதகமாக இருக்காது என்று தெரிந்து விட்டது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். தம் கட்சிக்காரரை அழைத்து ""நான் நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பதற்கு முடிவு செய்துவிட்டேன்'' என்றான் விக்டர்.
""அடப்பாவி... அவர் மிகவும் நேர்மையான நீதிபதி. வேறு வினையே வேண்டாம்'' என்று பதறினான் அந்த பிசினஸ்மேன். விக்டரோ லஞ்சம் கொடுப்பதில் தீவிரமாக இருந்தான்.
இரண்டாம் நாள் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. பிசினஸ்மேன் விடுதலை ஆனான். பிசினஸ்மேன் ""எப்படி?'' என்றான்.
""நான் வெகுமதி அனுப்பி வைத்தது உண்மைதான். ஆனால் அத்துடன் எதிர்க்கட்சி வக்கீலின் விசிட்டிங் கார்டை அல்லவா இணைத்து அனுப்பினேன்?'' தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னான் விக்டர்.
இம்போர்ட்டட் சரக்கு!: மனம் எனும் பூதம்!
மார்ட்டின் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். நடுக்கடலில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு சுறாமீன் அவனது படகை முட்டித் தள்ளியது. படகு 10 அடி உயரத்துக்குப் பறந்தது. கீழே விழுந்து கொண்டிருந்தபோது ""கடவுளே காப்பாற்று'' என்றான் அனிச்சையாய். உடனே அவன் அந்தரத்தில் அப்படியே உறைந்தபடி இருந்தான். கடவுள் அவன் முன் தோன்றினார். ""உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.
எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்தது மாதிரி சுறாமீனுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டால் அது தன்னைக் கொல்லாதென்று நினைத்தான் மார்ட்டின். ""சுறாவுக்கும் கடவுள் நம்பிக்கை தா'' என்றான்.
""சரி'' என்றார் கடவுள்.
அடுத்த வினாடி சுறா, ""கடவுளே எனக்கு இரை தந்ததற்கு நன்றி'' என்றது. மார்ட்டின் சுறாவின் வயிற்றுக்குள் சென்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக