புதன், டிசம்பர் 19, 2007

கிழக்குக்கடற்கரை சாலையை விரும்பும் சந்தியா!





சினிமா சான்ஸ் கிடைத்திருக்கவில்லையென்றால் எந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்திருப்பீர்கள்?
இந்த ஆண்டுதான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப் போகிறேன். அதில் பெறும் மார்க்கை வைத்துதான் மேற்கொண்டு என்ன படிப்பது என்று யோசிக்க முடியும்.


எது உங்கள் சாய்ஸ்...? புடவை? அல்லது மாடர்ன் ட்ரஸ்...?
சுடிதார்.


எப்படி நடிக்க வந்தீர்கள்?
சினிமா துறையில் மானேஜராக இருக்கும் மனோஜ் எங்கள் பேமிலி நண்பர். ஒரு விளம்பரப் படத்துக்காக என்னை பள்ளிக்கூட யூனிபார்மிலேயே போட்டோ எடுத்து வைத்திருந்தார். "காதல்' படத்துக்குப் பள்ளிக்கூட மாணவி வேடத்துக்கு கேட்டபோது, அந்தப் போட்டோக்களையே இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் காட்டினார். அவருக்குப் பிடித்துப் போக, அடித்தது யோகம்.


பார்ப்பதற்கு வெயிட்டாகத் தெரிகிறீர்களே?
பார்ப்பதற்கு அப்படித் தெரிகிறேன். நான் 49 கி.கி.தான்.

என்ன விரும்பி சாப்பிடுவீர்கள்?
பிட்சா.


செல்லப் பெயர்?
அம்மு. நிஜப் பெயர் ரேவதி. சினிமாவுக்கு சந்தியா.


அடிக்கடி செல்ல விரும்பும் பிரதேசம்?
கிழக்குக் கடற்கரை சாலை.


சமீபத்தில் எதற்காக அதிர்ச்சி அடைந்தீர்கள்?
சந்தியா தண்ணி அடிச்சுட்டு கலாட்டா என்று எழுதிவிட்டார்கள். முதலில் அதிர்ச்சியாக இருந்தது. நான் குடித்துவிட்டு கலாட்டா செய்வதைக் கற்பனை செய்து பார்த்தபோது சிரிப்புதான் வந்தது.


ஒரு பாட்டுக்கு ஆட கூப்பிட்டால் செல்வீர்களா?
என்னைப் பார்த்து யாரும் ஒரு பாட்டுக்கு ஆடக் கூப்பிட மாட்டார்கள் என்று நம்புகிறேன். குடும்பப் பாங்கான வேடத்தில் நடிப்பவர்களுக்கு இப்படியான அழைப்புகள் வருவதில்லை.


அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்...?
அது அப்பப்ப மாறுபடும். இப்போதைக்கு நான் நடித்து நானே பாடிய "மஞ்சள் வெயில்' படத்தின் பாடல்.

திங்கள், டிசம்பர் 10, 2007

25 ஆயிரம் மாணவர்கள்... ஒரு டிஸ்க் ஜாக்கி!







குதிரை ரேஸில் மட்டுமே கேள்விபட்டிருந்த ஜாக்கிகள் இப்போது பல்வேறு துறைகளிலும் அடிபட ஆரம்பித்திருக்கிறார்கள். ரேடியோ ஜாக்கிகள், விடியோ ஜாக்கிகளைத் தொடர்ந்து இப்போது உலகமெங்கும் பிரபலமாகி வருவது டிஸ்க் ஜாக்கிகள்...

கல்யாண விழாக்கள், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தொடங்கி கார்பரேட் கொண்டாட்ட களேபரங்கள் வரை வந்திருப்பவர்களை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் மகிழ்விப்பதற்கு உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கலாசாரம்தான் டிஸ்க் ஜாக்கி உலகம். பிரபலமான சினிமா பாடல்களைச் சுடச்சுட ரீமிக்ஸ் செய்து பாடி, ஆடி என்டெர்டெய்ன் செய்பவர்கள் டிஸ்க் ஜாக்கிகள். பார்ட்டி அரங்குகளில் இவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் வட்டமேடை (?) டிஸ்க் என்று அழைக்கப்படுகிறது. சரி.. ஜூட். சர்வ தேச அளவில் புகழ் பெற்று இருக்கும் டிஜே'வான நாஷா சமீபத்தில் நேச்சுரல் நிறுவனத்தின் புதிய கிளையின் திறப்புவிழாவுக்காக மும்பையிலிருந்து சென்னை வந்திருந்தார். அவர் நமக்களித்த பேட்டிக்குப் போவோமா?


உங்களுக்கு டிஜே லட்சியம் ஏற்பட்டது பற்றி சிறுகுறிப்பு?

இயற்பெயர் ரித்தேஷ் டி'úஸôசா. அப்பா, அம்மாவுக்கு இசையில் அதீத ஆர்வம் இருந்தது. நான் ஒரு ராக் ஸ்டார் ஆக வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் டி.ஜே.வில்தான் சாதிக்க வேண்டும் என்று எனக்கு எழுதியிருக்கிறது. 1999-ல் முதல் அரங்கேற்றம். தொடர்ந்து உலகம் முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாகிவிட்டது. எம்.டி.வி.யின் மிக நீண்ட நடன நிகழ்ச்சிக்காகப் பாடி கின்னஸ் சாதனையும் செய்தாகிவிட்டது.





உங்கள் நிகழ்ச்சியின் அரிய சந்தர்ப்பங்கள் என்று எதை நினைக்கிறீர்கள்?

ஜாகீர் ஹுசைன், யூ.ஸ்ரீனிவாஸ், செல்வகணேஷ், சிவமணி, ரஞ்சித் பரோட் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றிய நேரங்களை என்னால் மறக்கவே முடியாது.

பொழுதுபோக்குவதற்காக

உங்களை அழைக்கிறார்கள். ஏதாவது சந்தர்ப்பத்தில் அலுப்பு ஏற்பட்டு மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்ட சம்பவம் நடந்திருக்கிறதா?

அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. டி.ஜே.வின் அடிப்படை அம்சமே உற்சாகம்தான். நாங்கள் கலந்து கொள்ளும் விழா எத்தகையது என்பதை முன்னரே தெரிந்து கொள்வதால் அதற்கான தயாரிப்புகளோடு இருப்போம். உதாரணத்துக்கு புனேவில் 25 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட இண்டர் காலேஜ் நிகழ்ச்சி. மாணவர்களைக் கட்டுக் கோப்பில் வைத்திருப்பது சாதாரண விஷயமா? ஆனால் நான் நடத்திய நிகழ்ச்சிகளிலேயே மிக சிறப்பாக அமைந்த நிகழ்ச்சி அதுதான்.

டிஜே'வுக்கு விடப்பட்ட சவாலே அந்த நிமிடத்தில் மகிழ்ச்சிப்படுத்துவதுதான்.

இந்த விஷயத்தில் உங்களுக்குக் குரு யார்?

குரு என்று சொல்ல முடியாது. ஆனால் என் ஃபேவரைட் ஆசாமி இங்கிலாந்தைச்

சேர்ந்த "டிஜே' ஸ்க்வீன்.


வேறு இசை முயற்சிகள்?

இந்திப் படங்களுக்கு ரீமிக்ஸ் செய்ய அழைக்கிறார்கள். படங்களுக்குச் செய்வதை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆன் தி ஸ்பாட் ரீமிக்ஸில்தான் த்ரில். "முட்ஷே சாதிக்கரோ' படத்துக்கு ஒரு ரீமிக்ஸ் செய்திருக்கிறேன். டிஜே அகாடமி ஒன்று துவங்கியிருக்கிறேன். ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து சேர்கிறார்கள். இது ஒரு மகிழ்ச்சியூட்டும் முயற்சி என்ற விதத்தில் என் வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

தமிழ்மகன்

படங்கள்:மீனம் மனோ

ஒன்பது ரூபாய் நோட்டையொட்டி..!






தமிழ் நாவல்கள் திரைப்படங்களாவது பல சந்தர்ப்பங்களில் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகும்படிதான் ஆகியிருக்கிறது. எழுத்தின் சுவையை ஃபிலிம் சுருள் சாப்பிட்டுவிட்டதாக உலகு தழுவிய புகார் உண்டு.

இந்தப் பிரச்சினை தீருவதற்கு கதாசிரியர்களே இயக்குநர்கள் ஆனால்தான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் கதையை எழுதி, அதை இயக்கியும் இருந்தார் ஜெயகாந்தன். அப்படி தானே எழுதி தானே இயக்கியவர் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார் தங்கர் பச்சான். அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு நாவல் சமீபத்தில் சினிமாவாகி உள்ளது.

தமிழில் சிறப்பாகப் போற்றப்பட்ட பல நாவல்கள் சினிமா ஆகியிருக்கின்றன. பரவலாக ரசிக்கப்பட்ட பல நாவல்கள் சினிமாவாக ரசிக்க முடியாமல் போயிருக்கின்றன. ""1935-ல் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "மேனகா', "திகம்பர சாமியா'ரில் இருந்தே நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன. அகிலனின் "குலமகள் ராதை', "பாவை விளக்கு', "கயல்விழி' (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன. கல்கியின் "தியாக பூமி', "கள்வனின் காதலி', "பார்த்திபன் கனவு' போன்ற கதைகளும் மக்களால் கதையாகவும் சினிமாவாகவும் வரவேற்கப்பட்டன.

கொத்தமங்கலம் சுப்புவின் "தில்லானா மோகனாம்பாள்', நாமக்கல் கவிஞரின் "மலைக்கள்ளன்' ஆகியவை நாவலைவிடவும் பெரிய அளவில் சினிமாவாகச் சிலாகிக்கப்பட்டவை'' என்கிறார் சினிமா விமர்சகரும் திரைப்பட மக்கள் தொடர்பாளருமான பெரு. துளசி பழனிவேல்.

""மக்களுக்குச் சினிமா பொழுது போக்கு அம்சமாகவே உள்வாங்கப்பட்டிருக்கிறது. காமெடியும், அடிதடியும், கண்ணீரும் அதில் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கலர் ஃபுல்லாக வழங்கப்பட வேண்டும். ஆனால் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறுவிதமானது. கதையுலகில் ஆராதிக்கப்படும் ஆயிரம் பக்க "அன்னா கரீனி'னாவையும் "மோகமுள்'ளையும் சினிமாவாக்கும் போது இது இன்னும் பட்டவர்த்தனமாகத் தெரிய ஆரம்பிக்கிறது'' என்கிறார் ஓர் உதவி இயக்குநர்.

சுஜாதாவின் "காயத்ரி', "கரையெல்லாம் செண்பகப் பூ', "இது எப்படி இருக்கு' நாவல்களுக்குக் கிடைக்காத வரவேற்பு, மகரிஷியின் "புவனா ஒரு கேள்விக்குறி', "பத்ரகாளி' படங்களுக்குக் கிடைத்தது. வாசக வெற்றி திரைப்பட வெற்றிக்குப் போதுமானதாக இல்லாத நிலை இது. அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா, படமானபோது அது பரவலாக வரவேற்கப்படவில்லை.

மகேந்திரன் சில படங்களே இயக்கியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை நாவல்களே. திறமையான கலைஞர்களால் கதைகளை அதன் சாராம்சம் கெடாமல் திரைப்படங்களாக்க முடியும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம். உமா சந்திரனின் "முள்ளும் மலரும்', புதுமைப்பித்தனின் "சிற்றன்னை'யைத் தழுவி எடுத்த "உதிரிப் பூக்கள்', பொன்னீலனின் "பூட்டாத பூட்டுகள்', சிவசங்கரியின் "நண்டு' போன்ற நாவல்களைப் படமாக்கியிருக்கிறார் மகேந்திரன்.

""இருந்தாலும் சினிமா இயக்குநர்கள் அவர்கள் நேசித்து உருவாக்கிய கதையை உரசிப்பார்த்துக் கொள்ளவும் சரி பண்ணிக் கொள்ளவும்தான் தமிழ் எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற பல எழுத்தாளர்கள் வசனகர்த்தாக்களாக்கப்பட்டிருக்கிறார்கள் இப்போது'' என்கிறார் பழனிவேல்.

சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று சாதாரணமாக ஒரு பிரயோகம் உண்டு. சினிமா வேறு; நாவல் வேறு என்பதும் நமக்குப் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.

சனி, டிசம்பர் 08, 2007

எதிர்மென் அரக்கன்

சண்டை இந்தியன் வார இதழில் வெளியான என் விஞ்ஞான சிறுகதையான எதிர் மென் அரக்கன் இதோ உங்கள் பார்வைக்கு...

நாம் நம்பிக்கொண்டிருக்கும் கணினியும் மென் பொருள்களும் ஒருநாள் இப்படி காலை வாரினால் கிடைக்கும் ஒவ்வொரு தகவலும் நம்மை எப்படி பாடாய் படுத்தும் என்ற துக்ககரமான நகைச்சுவைக் காட்சி இது...

science fiction (part 1)

science fiction-2

science fiction-3

வியாழன், டிசம்பர் 06, 2007

"பரட்டை என்ற அழகு சுந்தரம்' - RAJINI' STORY PART-1

ரஜினியை வைத்து எழுதப்பட்ட படக் கதை இது. குங்குமம் இதழில் வெளியான போது பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தக் கதையை வலைப் பூ வாசகர்களுக்கு முன் வைக்கிறேன்.

"பரட்டை என்ற அழகு சுந்தரம்' என்ற கதா பாத்திரத்தில் ரஜினி...











part-2










part-3
























சேவை: மனம் இருந்தால் "மார்க்' உண்டு!






மன வளர்ச்சி குன்றியோர் காப்பகங்கள் பல உருவாகியுள்ளன. ஆனால் அவர்களை அவர்களே காத்துக் கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படும் அமைப்புகள் அவற்றில் சிலவே.

இத்தகையவர்களுக்காகக் கடந்த 22 ஆண்டுகளாக சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கி வந்த ஸ்பாஸ்டிக் சொûஸட்டி ஆஃப் இந்தியா அமைப்பு, இப்போது "வித்யாசாகர்' என்ற பெயரில் இயங்கத் தொடங்கியிருக்கிறது. ஏன் இந்தப் பெயர் மாற்றம் என்று அவர்களிடம் காரணம் கேட்ட போது, ""பெயரில்கூட அவர்களின் மன வளர்ச்சியை நினைவுபடுத்தி காயப்படுத்த வேண்டாம் என்பதால்தான்'' என்கிறார் ஜெயந்தி நடராஜன். இந்த அமைப்பின் விற்பனை மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவைச் சேர்ந்தவர் இவர். இத்தகையவர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்காகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறார்.




""கடந்த 22 ஆண்டுகளாக மூளை முடக்குவாதம் சம்பந்தமான ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்காகவும் மாணவர்களைப் பயிற்றுவிக்கவும் பாதுகாக்கவும் செயல்பட்டு வந்த நாங்கள் இப்போது அவர்களுக்கு இலவசமாகத் தொழிற் பயிற்சிகள் அளிக்கவும் ஆரம்பித்திருக்கிறோம்.

எந்தப் பணி இடத்திலும் ஆங்கிலத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதற்கான பயிற்சியை அளிக்கிறோம். கணினி சம்பந்தமான குறைந்தபட்ச திறன் இப்போது எல்லா துறைகளிலும் தேவையாகிவிட்டது. அதற்கான பயிற்சியையும் "பிஹேவியரல் ஸ்கில்' எனப்படும் நடத்தைத் திறனுக்கான பயிற்சியையும் அளிக்கிறோம். இவையாவும் இரண்டு மாத இலவச பயிற்சித் திட்டங்களாகும். நடத்தைத் திறன் என்பது உளவியல் ரீதியாக அவர்களை செழுமைப்படுத்துவதாகும். பழகும் தன்மை, செய்தியை விளங்க வைக்கும் திறமை போன்றவை சம்பந்தமானது.




18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட உடல் ஊனமுற்ற யாவரும் இதில் சேரலாம். உடல் ஆரோக்கியத்துடன் எல்லா திறமையும் இருந்தும் போட்டியை எதிர் கொள்வதற்கான மனோ தைரியம் இல்லாதவர்கள் இருக்கும் சூழலில் எங்களிடம் பயிற்சி பெறுபவர்களின் கண்களில் தெரியும் நம்பிக்கை ஒளி உண்மையில் பிரமிக்க வைக்கிறது'' என்கிறார் அவர்.

மனசுகள் முடங்காதவரை எதுவும் யாரையும் எதுவும் முடக்கிவிடமுடியாதுதானே? மனம் இருந்தால் "மார்க்' உண்டு!

புதன், டிசம்பர் 05, 2007

இம்போர்ட்டட் சரக்கு:

மகிழ்ச்சியின் நிறம் எது?

அந்த சர்ச் களை கட்டியிருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடு. மணமகளும் மணமகனும் திருமண ஆடையில் மகிழ்ந்திருந்தனர்.

திருமணத்துக்கு வந்திருந்த பீட்டர் தன் அம்மாவிடம் கேட்டான்:

மணமகள் எதற்கு வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்?

சற்றே யோசித்த அம்மா, ""மகிழ்ச்சியின் நிறம் வெண்மை. இது அவளுடைய மகிழ்ச்சியான நாள். அதனால் வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்'' என்றார்.

பீட்டர் கொஞ்ச நேரம் மணமகளைக் குழப்பமாகப் பார்த்துவிட்டு மீண்டும் கேட்டான்:

""அப்படியானால் மணமகன் கருப்பு கோட் அணிந்திருக்கிறாரே அது?''












ஜெயித்தது எப்படி?

விக்டருக்கு அது முதல் வழக்கு. எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்று தீவிரமாக வாதாடினான். ஆனால் சாட்சியங்கள் சரியாக இல்லை. எப்படியும் தீர்ப்பு தம் கட்சிக்காரருக்குச் சாதகமாக இருக்காது என்று தெரிந்து விட்டது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். தம் கட்சிக்காரரை அழைத்து ""நான் நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பதற்கு முடிவு செய்துவிட்டேன்'' என்றான் விக்டர்.

""அடப்பாவி... அவர் மிகவும் நேர்மையான நீதிபதி. வேறு வினையே வேண்டாம்'' என்று பதறினான் அந்த பிசினஸ்மேன். விக்டரோ லஞ்சம் கொடுப்பதில் தீவிரமாக இருந்தான்.

இரண்டாம் நாள் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. பிசினஸ்மேன் விடுதலை ஆனான். பிசினஸ்மேன் ""எப்படி?'' என்றான்.

""நான் வெகுமதி அனுப்பி வைத்தது உண்மைதான். ஆனால் அத்துடன் எதிர்க்கட்சி வக்கீலின் விசிட்டிங் கார்டை அல்லவா இணைத்து அனுப்பினேன்?'' தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னான் விக்டர்.

இம்போர்ட்டட் சரக்கு!:

பாவத்தின் விளைவு



உபதேசங்களை வாரி வழங்கினார் ஒரு சாமியார். பயபக்தியாய் தினமும் கேட்டுவந்தான் ஒரு சீடன். ஒருமுறை சாமியாரிடம், ""நமக்கு கடவுள்தான் எல்லாம். கடவுளை எப்போதும் நம்பு. அவர் எப்போதும் உன்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னீர்களே... நேற்றடித்த பெரும்புயலில் என் குடிசை விழுந்துவிட்டது'' என்று கோபமாகச் சொன்னான் சீடன்.

""அது நீ செய்த பாவத்தின் விளைவு'' என்றார் சாமியார்.

""உங்கக் குடிசையும்தான் விழுந்துவிட்டது. அது உங்கள் பாவத்தின் விளைவா?'' திரும்பக் கேட்டான் சீடன்.

புன்னகை மாறாமல் சீடனை ஆசிர்வதித்தபடியே சொன்னார்: ""நல்லவர்களையும் கடவுள் சோதிப்பதுண்டு.''







மனம் எனும் பூதம்!



மார்ட்டின் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். நடுக்கடலில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு சுறாமீன் அவனது படகை முட்டித் தள்ளியது. படகு 10 அடி உயரத்துக்குப் பறந்தது. கீழே விழுந்து கொண்டிருந்தபோது ""கடவுளே காப்பாற்று'' என்றான் அனிச்சையாய். உடனே அவன் அந்தரத்தில் அப்படியே உறைந்தபடி இருந்தான். கடவுள் அவன் முன் தோன்றினார். ""உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.

எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்தது மாதிரி சுறாமீனுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டால் அது தன்னைக் கொல்லாதென்று நினைத்தான் மார்ட்டின். ""சுறாவுக்கும் கடவுள் நம்பிக்கை தா'' என்றான்.

""சரி'' என்றார் கடவுள்.

அடுத்த வினாடி சுறா, ""கடவுளே எனக்கு இரை தந்ததற்கு நன்றி'' என்றது. மார்ட்டின் சுறாவின் வயிற்றுக்குள் சென்றான்.

இம்போர்ட்டட் சரக்கு: நியாயமான பயம்!



டாக்ஸியில் உட்கார்ந்திருந்த மில்டன் டிரைவரிடம் ஏதோ சந்தேகம் கேட்கும் நோக்கத்தில் அவன் தோளைத் தட்டி அழைத்தான். அவ்வளவுதான். டிரைவர் மிரண்டு போய் ப்ளாட்பார்ம் மீதும் மரங்களை உராய்ந்தும் தாறுமாறாய் காரை ஓட்டி காரை தடாலென நிறுத்தினான்.

""என்ன மிஸ்டர்... சும்மா இப்படி கூப்பிட்டதற்கு இவ்வளவு பயந்துட்டீங்களே?'' என்றான் மில்டன்.

""இது உங்கள் தவறு இல்லை. நான் இதுவரைக்கும் சவ வண்டிக்குத்தான் டிரைவராக இருந்தேன். எனக்குப் பின்னால் பிணத்தைத் தவிர வேறு எதுவும் இருந்ததில்லை. அதனால்தான்'' என்றான் டிரைவர்.





இம்போர்ட்டட் சரக்கு: கண்டுபிடிச்சேன்... கண்டுபிடிச்சேன்...

மனநல காப்பகத்தில் தம் உறவினரைப் பார்ப்பதற்காக வந்திருந்தான் அவன். தலைமை மருத்துவரைப் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள்? என்று விசாரித்தான்.

தலைமை மருத்துவர் விவரித்தார். எளிய சோதனை மூலம் கண்டுபிடிப்போம். இந்த பாத் டப்பில் நீரை நிரப்புவோம். பிறகு ஒரு ஸ்பூன், ஒரு டீ கப், ஒரு பக்கெட் மூன்றையும் அருகில் வைத்து விடுவோம். பாத் டப்பில் உள்ள நீரை அகற்றச் சொல்வோம்.

கேள்வி கேட்டவன், ""புரிந்து விட்டது. பக்கெட் மூலம் நீரை வேகமாக அப்புறப்படுத்துபவன் மனநலம் பாதிக்கப்படாதவன் அப்படித்தானே?''

""இல்லை. நார்மல் ஆசாமியாக இருந்தால் பாத் டப்பில் கீழே இருக்கும் ப்ளக்கை அகற்றி நீரை அப்புறப்படுத்துவான். ...ஓ.கே. உங்களுக்கு அந்த ஜன்னலோர படுக்கை போதுமா பாருங்கள்!''

செவ்வாய், டிசம்பர் 04, 2007

இம்போர்ட்டட் சரக்கு: 18

காது கேட்கலை!

வெளியூருக்கு வந்த இடத்தில் டேவிட்டின் கார் ரிப்பேர் ஆகிவிட்டது. தந்தைக்கு ட்ரங்கால் போட்டான். ""அப்பா அவசரமாக 200 டாலர் வேண்டும்''

""சரியா கேக்கல.... என்னப்பா சொல்றே?''

""200 டாலர்.... 200!

""லைன் சரியா இல்ல. சுத்தமா கேக்கல''

""கார் ரிப்பேர்... 200 டாலர் வேணும்''

""சாரிப்பா... கேக்கல''

டெலிபோன் ஆபரேட்டர் இடைமறித்து... ""உங்கள் மகன் சொல்வது எனக்கு நன்றாகக் கேட்குது'' என்றான்.

""அப்படி இருந்தா நீயே 200 டாலரைக் கொடு'' என்று போனை வைத்துவிட்டார் தந்தை.

இம்போர்ட்டட் சரக்கு 17

ஆதர்ச தம்பதி


அறுபதுகளில் இருந்த அந்தத் தம்பதிகள் தங்களுடைய 40-வது திருமண நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் முன் தேவதை ஒன்று தோன்றி, ""உங்களைப் போன்ற ஆதர்ச தம்பதிகளுக்குத் தலா ஒரு வரம் தர விரும்புகிறேன்'' என்றது.

மனைவியோ ""நான் என் கணவருடன் உலக நாடுகள் முழுவதையும் சுற்றிவர விமான டிக்கெட் வேண்டும்'' என்றாள்.

அடுத்த வினாடி டிக்கெட்டுகள் வந்து சேர்ந்தன.

அடுத்து கணவனின் முறை. தேவதை அவன் பக்கம் திரும்பியது. கணவன் ரகசியமாக தேவதையின் காதில் சொன்னான்:

""என் மனைவிக்குப் பதிலாக என் கேர்ள் ஃப்ரண்ட் பெயருக்கு டிக்கெட்டை மாற்றித் தரமுடியுமா?''

திங்கள், டிசம்பர் 03, 2007

இம்போர்ட்டட் சரக்கு!:15,16

மைக்ரோ கதை: மன்னரும் மாம்பழமும்!

அவன் ஒரு சாப்பாட்டு ராமன். மன்னரின் விருந்துக்கு அவனையும் அழைத்திருந்தனர். கூச்ச நாச்சமில்லாமல் சாப்பிட்டான். மூன்று பந்தி காலியாகும் வரை முதல் பந்தியில் அமர்ந்த அவன் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். மன்னர் அவனுடைய சாப்பாட்டுப் பிரியத்தைத் தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தார்.

வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க முடியாமல் எழுந்தான் அவன். மன்னர் கிண்டலாக, ""இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே?'' என்றார்.

""ஒரு பருக்கைகூட சாப்பிட முடியாது'' என்றான் அவன்.

அந்த நேரம் பார்த்து ஒரு தட்டு நிறைய மாம்பழத் துண்டுகளை எடுத்துச் சென்றான் ஒருவன். சாப்பாட்டு ராமனுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. உடனே அவனுக்கு மாம்பழத்துண்டுகளைப் பரிமாறச் சொன்னார் மன்னர். அவனும் ஏழெட்டுத் துண்டுகளை உள்ளே தள்ளினான்.

""இப்போதுதான் ஒரு பருக்கைகூட சாப்பிட முடியாது என்றாய். பிறகு எப்படிச் சாப்பிட முடிந்தது?'' } மன்னர் கேட்டார்.

""மன்னரே... உங்கள் சந்தேகம் நியாயம்தான். ஆனால் நெரிசலான சாலையில் திடீரென்று மன்னர் வருகிறார் என்றால் மக்கள் எல்லோரும் ஒதுங்கி நின்று மன்னருக்கு வழிவிடுவதில்லையா? அப்படித்தான் இதுவும்'' என்றான் சாப்பாட்டு ராமன்.

துணிச்சல் மிக்கவன்!

ஒரு கிராமத்தானும் அவனுடைய மனைவியும் பொருட்காட்சிக்குச் சென்றிருந்தனர். அங்கு ஹெலிகாப்டரில் பறப்பதற்கு க்யூ நிற்பதைப் பார்த்தனர். விவசாயி, ""பறப்பதற்கு எவ்வளவு?'' என்றான். ""ஒரு ரவுண்ட் சென்றுவர பத்தாயிரம் ரூபாய்'' என்றான் விமானி. ""ரொம்ப அதிகம்'' என்று விலகிச் சென்ற விவசாயியிடம், ""சரி.. உங்கள் இருவரையும் இலவசமாகவே அழைத்துச் செல்கிறேன். ஆனால் உங்கள் இருவரில் யாராவது ஒருவர் பயந்து அலறினாலும் பத்தாயிரம் ரூபாய் தந்துவிட வேண்டும்'' என்றான்.

இந்த டீலுக்கு சம்மதித்தான் விவசாயி. எப்படியாவது பணத்தைக் கறந்துவிட வேண்டும் என்ற வெறியில் ஏடாகூடமாக ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்றான் விமானி. எவ்வளவு பயமுறுத்தியும் ஒரு சத்தமும் இல்லை. வெறுத்துப் போய் தரையிறக்கினான்.

""சத்தமே போடவில்லையே... உண்மையிலேயே உன் துணிச்சலைப் பாராட்டுகிறேன்'' என்றான் விமானி.

விவசாயி, ""என் மனைவி கீழே விழுந்த நேரத்தில் உண்மையிலேயே கத்திவிடலாம் என்றுதான் நினைத்தேன். பிறகு அடக்கிக் கொண்டேன்'' என்றான் பெருமிதமாக.

சனி, டிசம்பர் 01, 2007

இம்போர்ட்டட் சரக்கு!: 13,14

ஜெயித்தது எப்படி?

விக்டருக்கு அது முதல் வழக்கு. எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்று தீவிரமாக வாதாடினான். ஆனால் சாட்சியங்கள் சரியாக இல்லை. எப்படியும் தீர்ப்பு தம் கட்சிக்காரருக்குச் சாதகமாக இருக்காது என்று தெரிந்து விட்டது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். தம் கட்சிக்காரரை அழைத்து ""நான் நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பதற்கு முடிவு செய்துவிட்டேன்'' என்றான் விக்டர்.

""அடப்பாவி... அவர் மிகவும் நேர்மையான நீதிபதி. வேறு வினையே வேண்டாம்'' என்று பதறினான் அந்த பிசினஸ்மேன். விக்டரோ லஞ்சம் கொடுப்பதில் தீவிரமாக இருந்தான்.

இரண்டாம் நாள் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. பிசினஸ்மேன் விடுதலை ஆனான். பிசினஸ்மேன் ""எப்படி?'' என்றான்.

""நான் வெகுமதி அனுப்பி வைத்தது உண்மைதான். ஆனால் அத்துடன் எதிர்க்கட்சி வக்கீலின் விசிட்டிங் கார்டை அல்லவா இணைத்து அனுப்பினேன்?'' தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னான் விக்டர்.

இம்போர்ட்டட் சரக்கு!: மனம் எனும் பூதம்!




மார்ட்டின் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். நடுக்கடலில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு சுறாமீன் அவனது படகை முட்டித் தள்ளியது. படகு 10 அடி உயரத்துக்குப் பறந்தது. கீழே விழுந்து கொண்டிருந்தபோது ""கடவுளே காப்பாற்று'' என்றான் அனிச்சையாய். உடனே அவன் அந்தரத்தில் அப்படியே உறைந்தபடி இருந்தான். கடவுள் அவன் முன் தோன்றினார். ""உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.

எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்தது மாதிரி சுறாமீனுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டால் அது தன்னைக் கொல்லாதென்று நினைத்தான் மார்ட்டின். ""சுறாவுக்கும் கடவுள் நம்பிக்கை தா'' என்றான்.

""சரி'' என்றார் கடவுள்.

அடுத்த வினாடி சுறா, ""கடவுளே எனக்கு இரை தந்ததற்கு நன்றி'' என்றது. மார்ட்டின் சுறாவின் வயிற்றுக்குள் சென்றான்.

இம்போர்ட்டட் சரக்கு: 11,12

ஹாலிவுட் நடிகை

ஒரு புதிய ஹாலிவுட் நடிகை ஒரு சீன சிறுவனை வீட்டு வேலைக்காரனாக நியமித்தாள். அவனிடம் அவன் செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லும்போது கூறினாள். ""நீ என் அறைக்குள் வருவதற்கு முன் எப்போதும் அறை கதவைத் தட்டிவிட்டு வரவேண்டும். ஏனெனில் சில நேரங்களில் நான் உடை அணிந்துகொண்டிருக்கலாம்.''

சிறிது நேரம் கழித்து, அந்தச் சிறுவன் அவளது அறைக்கதவை திறந்தான். அப்போது அந்த நடிகை அவனிடம் கேட்டாள்:

""கதவை முதலில் தட்டிவிட்டு வரவேண்டும் என்று சொன்னேனா இல்லையா? திடீரென நுழைந்துவிட்டாய். நான் ஆடை அணிந்துகொண்டிருந்தால் என்னாவது?''

""ஆடை அணிகிறீர்களா? இல்லையா? என சாவித்துவாரத்தின் வழியாக பார்த்துவிட்டுத்தானே வருகிறேன்'' என்றான் அவன்.

இம்போர்ட்டட் சரக்கு :நடக்கும் நாய்

ஜோசப் அந்த அதிசய நாயைக் கண்டு வியந்து போனான். தண்ணீர் மீது சர்வசாதாரணமாகத் தாவி ஓடுவதைக் கண்டான். தண்ணீரின் மீது நடக்கும் நாய் என்றால் ஆச்சர்யம்தானே? உடனே அதைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து, தன் நண்பர்களுக்கும் காட்ட விரும்பினான்.

தண்ணீரின் மீது ஓடி, நீர்வாத்துகளை அது பிடித்து வந்து கரையில் போடுவதை நண்பனுக்குக் காட்டினான்.

நண்பன் எந்தவித வியப்பையும் காட்டாமல் இருப்பதைப் பார்த்து, ""இது உனக்கு ஆச்சர்யமாக இல்லையா?'' என்றான்.

""ஆமாம். இதிலென்ன ஆச்சர்யம்? உன் நாய்க்கு நீச்சலே தெரியவில்லை. சும்மா சும்மா நீரின் மீது ஓடிக் கொண்டிருக்கிறது'' என்றான்.

இம்போர்ட்டட் சரக்கு: 9,10

வேலை நேரம்!

ஜானுக்கு சாலையின் நடுவே வெள்ளைப் பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்தது. முதல் நாள் ஆறு மைல் தூரம் வெள்ளைக் கோடு போட்டார். இரண்டாவது நாள் மூன்று மைல் தூரம் கோடு போட்டார். அடுத்த நாள் ஒரு மைல் தூரம்தான் போட முடிந்தது. சூப்ரவைஸர் கூப்பிட்டுக் கேட்டார்.

""ஏன் இப்படிக் குறைந்து கொண்டே போகிறது?''

""எப்போதும்போல் வேகமாகத்தான் அடிக்கிறேன். பெயிண்ட் கேன், முதல்நாள் அடிச்ச இடத்திலே இருந்தால் திரும்பத் திரும்ப தொட்டுக்கிட்டுத்தான வரணும்?''

இம்போர்ட்டட் சரக்கு!: மனைவி அமைவதெல்லாம்


மனைவியோடு தேம்ஸ் நதியின் ஓரத்தில் உலாவிக் கொண்டிருந்தான் தாமஸ். திடீரென்று கால் இடறி ஆற்றில் விழுந்துவிட்டாள் அவனுடைய மனைவி. கடவுளிடம் வேண்டினான் தாமஸ். அவனுடைய வேண்டுதலைக் கேட்டு கடவுள் அவன் முன் தோன்றினார்.

அவனைச் சோதிக்கும் விதமாக நடிகை ஜெனிபர் லோபஸ்ûஸ அவன் முன் நிறுத்தி ""இவள்தானே உன் மனைவி?'' என்றார்.

தாமஸ் ஒரு கணம் திகைத்தாலும் அடுத்த கணமே ""ஆமாம்'' என்று சொன்னான்.

கடவுளுக்கு ஆத்திரம் தாளவில்லை. ""இப்படிப் பொய் சொல்கிறாயே? இவளா உன் மனைவி?'' என்றார்.

""இவள் என் மனைவி இல்லைதான். அப்படி நான் மறுத்தால் அடுத்து நீங்கள் மடோனாவைக் கொண்டு வருவீர்கள். அவரையும் மறுத்தால் அதைத் தொடர்ந்து என் மனைவியைக் கொண்டு வருவீர்கள். என் நேர்மையைப் பாராட்டி மூவரையும் எனக்கு வழங்குவீர்கள். அதற்கு பயந்துதான். ஏதோ ஒன்றோடு போகட்டும் என்று ஜெனிபரையை ஓ.கே. சொல்லிவிட்டேன்'' என்றான் தாமஸ்

இம்போர்ட்டட் சரக்கு: 8,9

வேலை நேரம்!
ஜானுக்கு சாலையின் நடுவே வெள்ளைப் பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்தது. முதல் நாள் ஆறு மைல் தூரம் வெள்ளைக் கோடு போட்டார். இரண்டாவது நாள் மூன்று மைல் தூரம் கோடு போட்டார். அடுத்த நாள் ஒரு மைல் தூரம்தான் போட முடிந்தது. சூப்ரவைஸர் கூப்பிட்டுக் கேட்டார்.

""ஏன் இப்படிக் குறைந்து கொண்டே போகிறது?''

""எப்போதும்போல் வேகமாகத்தான் அடிக்கிறேன். பெயிண்ட் கேன், முதல்நாள் அடிச்ச இடத்திலே இருந்தால் திரும்பத் திரும்ப தொட்டுக்கிட்டுத்தான வரணும்?''


எத்தனைக் காகங்கள்?

ஒருநாள் மாலை அக்பர், பீர்பால் மற்றும் அமைச்சரவைச் சகாக்கள் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது வானில் ஏராளமான காகங்கள் பறந்தன.

அக்பருக்கு திடீரென ஒரு சந்தேகம். ""நம் ராஜ்ஜியத்தில் எத்தனைக் காகங்கள் இருக்கும் என்று இங்கு யாராவது சரியாகச் சொல்ல முடியுமா?'' என்று கேட்டார்.

சட்டெனச் சொன்னார் பீர்பால்.

""18 ஆயிரத்து முன்னூற்று அறுபத்து மூன்று''

பீர்பால் இப்படிக் குருட்டாம் போக்கில் பதில் சொல்வது அக்பருக்குப் பிடிக்கவில்லை.

""ஒருவேளை அதிகமாக இருந்தால்?''

""நமது ராஜ்ஜியத்துக்குப் புதிதாக வந்த விருந்தினராக இருக்கும்''

பீர்பாலின் சமாளிப்பு புரிந்தது.

""சரி.. ஒரு வேளை குறைவாக இருந்தால்?''

""உங்கள் புகழ் பரப்ப பக்கத்து ராஜ்ஜியத்துக்குச் சென்றிருக்கும்''

பீர்பாலின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார் அக்பர்.

இம்போர்ட்டட் சரக்கு: 6,7

செவிச் "செல்வம்'

அவர் பெரிய செல்வந்தர். நெடுங்காலமாகக் காது கேட்காமல் அவதிபட்டு வந்தார். காது மிஷின் மாட்டிக் கொள்வதில் சின்ன தயக்கம் இருந்ததே அதற்குக் காரணம்.

ஒரு கட்டத்தில் வேறு வழியில்லை என டாக்டரை அணுகினார். அவரும் வெளியே யாருக்கும் தெரியாதபடியான மிகச் சிறிய காது மிஷின் வந்திருப்பதைத் தெரிவித்து அதையே பொருத்தினார்.

ஒரு மாதம் கழித்து டாக்டரிடம் வந்தார் செல்வந்தர். ""இந்தக் காது எந்திரம் மிகப் பிரமாதமாக வேலை செய்கிறது. வாழ்த்துகள்'' என்றார்.

உங்கள் வீட்டில் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்களே?'' என்றார் டாக்டர்.

செல்வந்தர் வெறுப்பாகப் பதில் சொன்னார்: ""இதுவரை வீட்டில் எனக்குக் காது கேட்கிற விஷயத்தைச் சொல்லவில்லை. இந்த ஒரு மாதத்திலேயே மூன்று முறை உயிலை மாற்றி எழுதும்படி ஆகிவிட்டது.''


இம்போர்ட்டட் சரக்கு: மகிழ்ச்சியின் நிறம் எது?

அந்த சர்ச் களை கட்டியிருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடு. மணமகளும் மணமகனும் திருமண ஆடையில் மகிழ்ந்திருந்தனர்.

திருமணத்துக்கு வந்திருந்த பீட்டர் தன் அம்மாவிடம் கேட்டான்:

மணமகள் எதற்கு வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்?

சற்றே யோசித்த அம்மா, ""மகிழ்ச்சியின் நிறம் வெண்மை. இது அவளுடைய மகிழ்ச்சியான நாள். அதனால் வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்'' என்றார்.

பீட்டர் கொஞ்ச நேரம் மணமகளைக் குழப்பமாகப் பார்த்துவிட்டு மீண்டும் கேட்டான்:

""அப்படியானால் மணமகன் கருப்பு கோட் அணிந்திருக்கிறாரே அது?''

LinkWithin

Blog Widget by LinkWithin