வெள்ளி, ஜூலை 07, 2006

தமிழ்மகன் என்பது என் பெயர். அவ்வப்போது எழுதுவதும் உண்டு. சில நேரங்களில் சற்றும் எதிர்பாராதவிதமாக அதைச் சிலர் பாராட்டிவிடுவதும் உண்டு.
முதலில் நான் எழுதிய நாவல் 1984 ஆம் ஆண்டில் (இளைஞர் ஆண்டு) இதயம் பேசுகிறது வார இதழில் தேர்வாகி 85-ல் வெளியானது. எனக்கு அப்போது வயது 21. தலைப்பு: (1) வெள்ளை நிறத்தில் ஒரு காதல்.
தொடர்ந்து (2) மானுடப் பண்ணை என்ற நாவலை எழுதினேன். அது தமிழக அரசு பரிசு பெற்றது.
பிற படைப்புகள்
3. சொல்லித்தந்த பூமி (நாவல்)
4. ஏவி.எம். ஏழாவது தளம் (நாவல்)
5. மிஸ். மாயா (நாவல்)
6. கடவுள் II (நாவல்)
7. மொத்தத்தில் சுமாரான வாரம் (குறு நாவல்)
8. முன்னால் தெய்வம் (சிறுகதை தொகுதி)
9. சாலை ஓரத்திலே வேலையற்றதுகள் (சிறுகதை தொகுதி)
10. வாக்குமூலம் (நடிகர் சத்யராஜ் வாழ்க்கைப் பதிவு)
11. சங்கர் முதல் ஷங்கர் வரை (இயக்குநர் ஷங்கர் வரை)
12. விமானங்களை விழுங்கும் மர்மக் கடல் (விஞ்ஞானக் கட்டுரை தொகுதி)
13. பூமிக்குப் புரிய வைப்போம் (கவிதைத் தொகுதி)
14. ஆறறிவுமரங்கள் (கவிதைத் தொகுதி)
15. (þÉ¢ ±Ø¾ þÕôÀ¨Å)

1 கருத்து:

மஞ்சூர் ராசா சொன்னது…

ஒரு எழுத்தாளராக இருக்கும் உங்களின் பதிவுகள் சரியான முறையில் பதிவுலகினரால் கவனிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

நானே இன்று தான் உங்கள் பதிவிற்கு வந்திருக்கிறேன். இப்படித்தான் சில முக்கிய பதிவுகளும், பதிவர்களும் இணையத்தில் ஆங்காங்கே மறைக்கப்பட்டும், மறந்தும் இருக்கின்றனர்.

வாழ்த்துக்கள்.

இனி தொடர்ந்து வருவேன்.

நன்றி.

LinkWithin

Blog Widget by LinkWithin