திங்கள், பிப்ரவரி 13, 2012

இது பாம்புக் கதை அல்ல

‘‘பாம்பு ரெண்டு நாளா சாப்பிடல சார்.. ஏதாவது தர்மம் பண்ணுங்க சார்’’ என்ற குரல் பஸ்ஸின் ஜன்னல் ஓரத்தில் இருந்து வந்தது.
நான் திரும்பி குனிந்து பார்ப்பதை அறிந்து, பாம்புகள் தவிர வேறெதையும் பத்திரப்படுத்தி வைக்க முடியாத அந்தப் பிரத்யேக மூங்க¤ல் கூடையை எனக்கு உயர்த்திப்பிடித்துக் காண்பித்தான் பாம்பாட்டி. அவன் காட்டிய கூடையில் நல்ல பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் இதுவரை நான் எந்தப் பாம்பையும் பார்த்ததில்லை. என் கையில் உரசும் தூரத்தில் பாம்பின் தலை இருந்தது.
‘‘கடிச்சிடப் போகுதுப்பா.. தள்ளிப்புடி..’’
‘‘கடிக்காது சார்... ரெண்டு நாளா அதுவே சாப்புடாம பட்னியா கெடக்குது சார்’’
அதுதான் மேலும் பயமுறுத்தியது. இருக்கிற பசியில் கவ்வியெடுத்துவிட்டால்..?
பாம்பின் தலை மீது ஒரு தட்டுத் தட்டி அதை சீறும்படி செய்தான் பாம்பாட்டி.
‘‘பாம்புக்குப் பசி எடுத்தா என்னை என்னப்பா பண்ண சொல்றே?’’
‘‘முட்டை வாங்கித்தந்தா சாப்பிட வெச்சுடுவேன் சார்’’
அவனுக்கு இருபத்தைந்து மதிப்பிடலாம். ஆனால் அதை வெளிப்படுத்துவதில் காட்டிய அலட்சியத்தால் இன்னொரு பத்து வயது கூடுதலாகத் தெரிந்தான்.

ஐந்து ரூபாய் கொடுத்து அனுப்பிவைத்தேன். பஸ் கிளம்புகிற மாதிரி தெரியவ¤ல்லை. பஸ்ஸில¢ என்னைத் தவிர வேறு யாரும் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இறங்கி வ¤சாரிக்கலாம் என கீழே வந்தேன். பேருந்து அலுவலகத்தில் கொட்டாவி விட¢டுக் கொண்டிருந்தவர், வாயை அவசரப்பட்டு மூடும் எத்தனம் எதுவும் இல்லாமல் ‘‘ஆ.....றுமணிக்கித்தான்’’ என்றார். ஆ....றுமணிக்கு இன்னும் ரொம்ப நேரம் இருந்தது.
நேரத்தைக கடதத உடனடியாக அங்கு செய்ய முடிவது ஒரு டீ குடிப்பதுதான். ஆனால் அதற்கு அவசியம இருக்கவில்லை. அந்தப் பாம்பாட்டி பாம்பின் பக்கத்தில் முட்டையை வைத்துக் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பாம்பு எப்படித்தான் முடடையை விழுங்குமா என்று ஆச்சர்யமாக இருந்தது.
அவன் என்னைப் பார்த்துவிட்டான்.
‘‘உடம்பு சரியில்ல இவனுக்கு. முன்னெல்லாம் லொடுக்குனு முழுங்கிட்டு ஓட்டை மட்டும் வெளிய துப்பிடுவான்... பாம்பு டாக்டர் யார்ன்னா தெரிமா சார் உனுக்கு?’’
‘‘எதுக்கு பாம்பை வெச்சுக்கிட்டு அவஸ்தை பட்றே..? காட்லவுட்டா பொழைச்சு போவுது’’
அவன் துயரம் கொட்டும் பார்வையோடு என்னைப் பார்த்தான்.
‘‘என்னவுட்டா அதுக்கு யாரும் இல்ல சார்... அதுவாத்தான் என்னைத் தேடி வந்துச்சி. அதான் சார்¢ பிரச்னை. நம்மளைத்¢ தேடி வந்த ஜீவனைத் தொரத்தி அடிச்சா எங்க சார் போவும¢?’’
ஆரம்பத்திலிருநதே அவனுடைய போக்கு விபரீதமாகத்தான் இருந்தது. பாம்புக்கு உடம்பு சரியில்லை என்பதும் பாம்பு டாக்டர் இருக்காங்களா என்பதும் பாம்புதான் என்னைத் தேடி வந¢தது என்பதும் எல்லாமே ஆர்வம்தருவதாக இருந்தது. ஆ..று மணி வரைக்கும் இவனே போதும். அவனுக்குப் பக்கத்த¤ல் பேருந்து திண்டில் உட்கார்ந்தேன்.
‘‘நான் பாம்பாட்டி கெடையாது சார். கொளுத்து வேலதான செஞ்சிக்னு இருந்தன். வூடு கட்றதுக்கு பக்தா நாயுடு சூளை பிரிக்கும்போது நிறைய பாம்பு கெடக்குதுன்னு சொன்னாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி போட்ட சூளை சார். இப்பத்தான் வீடு கட்றதுக்கு வேலை வந்துது. கட்டுவேலை பாத்துகுனு இருந்தவன் பராக்கு பாக்கறதுக்குப் போனேன். பாம்பைப் பார்த்துட்டு எல்லாரும் பயந்து ஓடினப்ப நானு முன்னாடிப் போயி சின்னதும் பெருசுமா பதனாறு நல்ல பாம்பை அடிச்சுப் போட்டேன். அதாங்க பர்ஸ்ட்டு.. அப்¢புறம் எங்க பாம்பு புடிக்கணும்னாலும் என்னைத்தான் கூப்புடுவங்க.’’

அதன் பிறகு அவன் சொன்னது இதுதான்.

சித்திரையின் சொந்த ஊர்¢ செங்கல்பட்டு அருகே ச¤றுனியம். புதிதாக மணமாகி வனிதா என்ற அழகான இளம் மனைவி. கணவன் இபபடி பொழுதுக்கும் பாம்பு பிடிக்கிற வேலையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதில் அவளுக்கு எரிச்சல¢ இருந¢தது. ஒரு சினிமா இல்லை. விசேஷம் இல்லை...
அன்றைக்கு பாம்பு பிடிக்க வருமாறு அழைத¢தான¢ பாளையம். குடிசையின் வாசலில் இருந்து அவன் விளித்த அபயக்குரலில்¢ இருந்த பதற்றத்தைச் சித்திரையால¢ அனுமானிக்க முடிந்தது. சித்திரை இன்றைய சம்பாத்தியத்துக்கு வழ¤ க¤டைத¢துவிட்ட சந்தோஷத்துடன் லுங்கியை அவிழ்த்து இறுக்கிக் கட்டுவதற்குள் வனிதா குறுக்கே வந்தாள். ‘‘எங்க கௌம்பறே இப்போ? நீ பாம்பு புடிக்கப் போனியனா நான் என் ஆத்தா வூட்டுக்கு பஸ¢ ஏறிடுவேன்¢.. சொல்லிட்டேன்’’ தீர்¢மானமாகச் சொன்னாள்.
சித்திரை மனைவியின் பேச்சைத் தட்டமுடியாமல் ‘‘அவன்கிட்டே வரமுடியாதுன்னு சொல்லிட¢டு வந்துட்றேன்’’ என்றபடிதான் வெளியே வந்தான். பாளையத்தின் பதற்றமான முகத்தைப் பார்த்தபோது அவனால் ‘எங்கே இருக்குது?’ என்பதாகத்தான் கேட்கமுடிந்தது.
வீட்டின் கட்டிலுக்கு அடியில் பாம்பைப் பார்த்தததாகச் சொன்னான் பாளையம். ஆவேசமாக வெளியில் வந்த வன¤தா, புடவை முந்தானையை உதறிய வேகத்தையும் கொண்டையை முடிந்து கொண்ட வேகத்தையும் பார்த்தபோது அவள் புறப்பட்டுப் போய்விடுவாள் போலத்தான் இருந்தது. அவள் போகவில்லை.
வனிதாவின் அம்மா இதுவிஷயமாக மருமகனைத் திருத்துவதற்கு வந்தாள்.
‘‘நாகதோஷம் பொல்லாததுப்பா.... நாகாத்தம்மன் கோயில்ல நாப்பது நாள் வெளக்கு வெச்சு பூஜை பண்ணாக்கா சரியாயிடும்.’’
‘‘நான் இங்க சோறு இல்லாத, தண்ணி இல்லாத கஷ்டப்பட்றேன். பாம்பு புடிக்கிறனாங் காட்டியும¢ ஏதோ செலவுக்கு வந்துக்குனுக்கிது.. அதையும் வுட்டுட்டு இன்னா பண்ண சொல்றே?’’ என்ற தர்க்கரீதியான கேள்வியை மாமியாரிடம் கேட்டான்.
அவன் பாம்பு பிடிப்பதை விடுவதாக இல்லை என்பது அடுத்த ஆறு மாதத்தில் உறுதியாகத் தெரிந்துவிட்டது. அடிக்கடி அம்மா வீட்டுக்குக் கிளம்பிப்போய்விடுவதும் வருவதுமாக இருந்தாள்.
வனிதா அவனிடம் பட்டாணி வாசனை வருவதாகவும் அது பாம்புகளுக்கான வாடை என்றும் ஒருதரம் அருவருப்பாகச்¢ சொன்னாள். அவள் அப்படிச் சொன்னது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
நடுவே ஒருதரம¢ சித்திரையை பாம்பு தீண்டிவிட்டது. வாயில் நுரைதள்ளி ஒருவழியாகப் ப¤ழைத்துவந்தான். அத்துடன் அவன் பாம்பு பிடிப்பதை விட¢டுவிடுவான் என்று வனிதா எதிர்பார்த்தாள். ஆனால் அதன் பிறகு அவனுக்கு பயம் சுத்தமாகப் போய்விட்டது. அடுத்தமுறை அவனை பாம்பு தீண்டிய போது விஷமே ஏறவில்லை. பாம்பு கடித்த இடத்தில¢ கொஞ்சம் சுண்ணாம்பு மட்டும் தடவிவிட¢டு சும்மா இருந்துவிட்டான். அவனைக் கடித்த பாம்புதான் இறந்து போய்விட்டதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.
வனிதா அவனே பாம்பாக மாறிவிட்டது போன்று அவனை நெருங்கவே பயந்தாள். எல்லா பாம்புகளும் அவனுக்குத் தண்ணி பாம்பு போலத்தான். அவள் பாம்புக்கு ரொம்பவும் பயப்பட ஆரம்பித்தாள். அதனால் ஒருநாள் முடிவாக அவனைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாள்.
இதுதான் அவன் சொன்னக் கதை.
அவன் இன்னும¢ சொல்லிக் கொண்டிருப்பவன் போலத்தான் இருந்தான். அதற்குள் பஸ்ஸை எடுக்கவே நான்தான் கிளம்பிவிட்டேன்.

இந்தக் கதை இன்னொரு இடத்தில் இருந¢து மறுபடியும் தொடரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் தேவநேய பாவாணர் அரங்கங்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் பாம்புகள் குறித்துப் பேசுவதாகச் சொல்லி நண்பர் அழைத்துச் சென்றார். சிறிய அரங¢கம¢. மேடையில் இருப்பவர்களையும் சேர்த்துப் பதினாறு பேர் இருந்தனர். ஒருவர் வேட்டி சட்டை அண¤ந்து தனியாகத் தெரிந்தார். காலில் மாட்டியிருந்த ரப்பர் செருப்பின் ஒரு பட்டை நீல நிறத்திலும் ஒரு பட்டை பச்சையிலும் இருந¢தது. முன் வரிசையில் அமர்ந்து கொண்டு அவருக்காகத்தான் மேடையல் இருப்பவர் பிரத்யேகமாகப் பேசுவது போல வேகமாக தலையசைத்து, பேசுபவரை ஆமோதித்துக் கொண்டிருந்தார்.
பாம்புகள் குறித்து அன¢று பேசியவர் சொல்லியதில் இரண்டு முக்கியமான வ¤ஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
பாம்புக்குக் கால்கள் இல்லை என்றுதான் இதுவரை ந¤னைத்திருந்தேன். சில பாம்புகளுக்கு இரண்டு சிறிய கால்கள் இருக்கின்றன. அவற்றில் நகங்களும் உண்டு என்றார்.
அப்படியா என அங்கிருந்தவர்களில் பனிரெண்டு பேர் அவசரமாக ஆச்சர்யப்பட்டு கேட்டனர்¢. மீதி மூன்றுபேருக்கும்கூட ஆச்சர்யம் இருந்தது. ஆனால் கேட்க தயங்கியவர்¢களாக இருந்தனர்.
அவை எப்போதும் அதன் உடலுக்குள் புதைந்தபடியே இருக்கும். எதையாவது பற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் போதுதான் அவற்றைப் பயன்படுத்துகின்றன. நல்ல பாம்பு தன் இணையைச் சேரும்போது அந்தக் கால்கள் மூலம்தான் இணையைப் ப¤டித்துக் கொள்கிறது என்றார்.
ஒரு பாம்பைக்¢ கொன்றுவிட்டால் அதன் இணை கொன்றவர்களைப் பழிவாங்குவதற¢கு வருமா என்று ஒருவர் கேட்டார். எனக்கு அது அபத்தமான கேள்வியாக இருந்தது. ஒரு நடிகை பாம்பாக ஒரு படத்தில் நடித்தார். அவள் தேவைப்படும¢ நேரங்களில் பெண்ணாகவும் பாம்பாகவும் மாறிக் கொள்ளும் வசதி கொண்டவளாக இருப்பாள். பெண்ணாக இருக்கும் தருணங்களில் கவர்ச்சியான உடை அண¤ந்துவந்து தன் பாம்புக்¢ கணவனைக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பாள். பாம்பு வந்¢து பழி வாங்குவது அந்த அளவுக்குத்தான் நம¢பகத்தன்மை கொண்டதாக இருந்தது.
ஆனால் அந்¢தப் பாம்பு ஆய்வாளர் பாம்புகளைக் கொன்றால் வேறு ஒரு பாம்பு அந்த இடத்தைத் தேடி வருவதுண்டு என்றார்.
‘‘பாம்புகள் இனப்பெருக்கத்துக்க்கான வேட்கை கொள்ளும்போது பிரோமோன் என்ற வாசனையை வெளியிடுகிறது. அந்¢த வாசனையைக்¢ கொண்டே பாம்புகள் தங்கள் ஜோடியைக் கண்டடைகின்றன. பாம்புகளை நாம் தாக்கும்போது தன்னிச்சையாக பாம்பின் உடம்பில் இருந்¢து பிரிமோஸ் வெளியாகிவிடுகிறது. அந்த வாசனைக்காக அடுத்த நாளில¢ அந்த இடத்¢துக்கு ஒரு பாம்பு தேடி வருவதற்கான வாய்ப்பு ந¤றைய உண்டு. அதையே மக்கள் பாம்பு பழி வாங்க வந்ததாக நினைத்துக் கொள்கிறார¢கள்’’ என்ற தகவலைச் சொன்னார¢. இந்¢த இரண்டு தகவல்களும் ‘அன்று பெற்றவை’யாக இருந்தன.
அதையட்டி ஒரு சம்பவத்தைச் சொன்னார். ‘‘க¤ராமத்து வீடு ஒன்றில் மனிதனை ஒரு பாம்பு தீண்டிவிட¢டது. அவன் இறந்¢து போய்விட்டான். அங்கிருந்த பாம்பைக்¢ கண்டுபிடித்து அடித்துக் கொன்றுவிட்டார்கள். அடுத்த ஒரு வாரம் அதே வீட்டில் அவன் மனைவியும் இன்னொரு பாம்பு கடித்து இறந்து போய்விட்டாள். மக்கள் உடனே நாகதோஷம¢ என்று கிளப்பிவிட்டார¢கள். பாம்பை அடித்துவிட்டால் அந்த இடத்தில் வேறு வாசனை திரவியத்தை அந்த இடத்தில் தெளித்துவிட்டாலே போதும். அந¢தக் காலத்தில் பாம்பை அடித்தால் மஞ்சளைக் கரைத்துத்¢ தெளிக்கும் சடங்குகள் இருந்தன’’ அவர் பேசிக்கொண்டு போனார்¢.
கூட்டத்தில் வேட்டி சட்டையில் அமர்ந்திருந்தவர்,. ‘‘எங்க ஊர்ல பாம்பு புடிக்கிறவன் ஒருத்தன் இருந்தான். அவனுக்குப் பாம்பு கடிச்சா விஷம் ஏர்¢றது இல்ல. சும்மா கொஞ்சம்¢ சுண்ணாம்பு தடவிப்பான். அவ்ளதான். அதெப்படி?’’ ஏதோ புதிர்போட்டுவிட்டு வ¤டைகண்டுபிடிக்கச் சொன்னவர் மாதிரி கேட்டார்.
‘‘ஏற்கெனவே சின்னச் சின்ன பாம்புகள் கடித்து விஷம் பழகியவர்களுக¢கு நம் உடம்பிலேயே விஷ முறிவு உருவாகிவிடும்.. அதே போல ஒரு நல்ல பாம்பு அடுத்தடுத்து யாரையாவது தீண்டினாலும் இரண்டாவதாகக் கடிபட்டவருக¢கு விஷத்தின¢ வீரியம் கம்மியாகத்தான் இருக்கும்.. மூன்றாவது பாம்பு தீண்டியதும் பதறாமல் இருக்க வேண்டும். பதறினால் ரத்தவோட்டம் அதிகமாக இருக்கும். விஷம் வேகமாக பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் சொல்கிற நபர் இப்படி ஏதாதொரு காரணத்தால் தப்பித்திருக்கலாம’’ என்று பொறுமையாக பதில் சொன்னார்¢.
அந்த பதில் அவருக்குப் போதுமானதாக இருந்தது. ‘‘அவன் எம காதகனாச்சே... பதறவே மாட்டான்...’’ என சமாதானம் சொல்லிக் கொண்டார்.
கூட்டம் முடிந்¢து அந்¢தச் சிறிய குழு மெள்ள கலைந்தபோது வேட்டிக்காரரிடம் எனக்குப் பேசுவதற்கு வ¤ஷயம் இருப்பது போல¢ இருந்தது.
‘‘நீங்க சித்திரையைப் பத்தித்தான¢ சொன்னீங்களா?‘‘ என்று ஆரம்பித்தேன்.
‘‘அட அவனைத் தெரியுமா... அவனை எப்பிடித் தெரியும்?’’
‘‘செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன்.’’
‘‘அவன் பொண்டாட்டி பாம்பு கடிச்சு செத்துப் போன பொறவு அவன் ஊர¢லயே தங¢கறத¤ல¢ல.. அவனாச்சு அவன் பாம்பாச்ச¤.. எங்கயாவது சுத்திக்கிட்டு இருப்பான்... நான¢ இங¢க டி.வி.எஸ்.ல பேரிங் வாங்கறதுக்கு வந்தேன் ... பாத்தாக்கா பாம்பபத்தி பேசறதா ‘போடு’ல எழுதி வெச்சிருந்தாங்க. சரி இன்னான்னு பாக¢கறதுக்கு வந்தேன்.. செங்கல்பட¢டு வந¢தா ச¤றுன¤யத¢துக¢கு வாங¢க. இப¢ப பஸ¢ உட¢டுக¢க¤றானுங¢க. சம்பந்தம் வூடுன்னா யார்ன்னாலும் சொல்லுவாங்க..’’ &மூன்று விஷயங்களை மூன்று சிறிய நிறுத்தங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாகச் சொன்னார். நான் தலையை மட்டும் ஆட்டினேன்..
அவருடைய அன்பான அழைப்பை என் காது ஏற்கவே இல¢லை. வன¤தா கோபிச்சுக்க¤ட¢டுப் போனதாகச் சொன்னது ஏன் என்ற சந்தேகம் வ¤ஷம் மாதிரி இறங்க¤யது.

இந்தக் கதையைத் தொடங்குவதற்கு எனக்கு முதல்வரி கிடைத்துவிட்டது.

வனிதாவை அந்தப் பாம்புதான் கடித்தது என்று தெரிந்தும் சித்திரை அதைச் செல்லமாக வளர்ப்பதற்கு ஒரு காரணம் இருந்தது.

... இனிமேல்தான் எழுத வேண்டும் இந்தக் கதையை.

நன்றி:விகடன் பிப்.2012

LinkWithin

Blog Widget by LinkWithin